
இதை எதிர்பார்த்திடாத குமரன் தடுமாறிப் போனான். சரவணனைத் தேற்றிட வார்த்தை தேடினான்
உடனே அணைத்துக் கொண்டு கூறினான்.
"இவை ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நிகழ்வாகவே அமையும் என்று நினைத்துக் கொண்டேன். இப்படி நீங்கள் மனம் வருந்திடும் சூழ்நிலையில் வரும் என்பதை நான் நினைக்கவேயில்லை அண்ணா. மன்னியுங்கள். நீங்கள் ஒருவரே என்னைப் புரிந்து கொண்டவர். மீண்டும் கூறுகிறேன், தவறாக எண்ணாதீர்கள் என்றான்."
உடனே சரவணன் குமரன் தோளைத் தொட்டு
"ஐயோ குமரா. நான் சாதாரணமா மனநிலையில் தான் கூறினேன் கொஞ்சம் மனம் வேதனை எழுந்தது உண்மை தான், என்னிடமாவது உண்மையைக் கூறி இருக்கலாமே என்று ,அதற்காக நான் உன்னை வெறுக்க வில்லை நீ மன்னிப்பு கூறவேண்டியதே இல்லை ஒரு உரிமையில் கேட்டு விட்டேன் சரி .விடு சந்தோசம் குமரா வாழ்த்துகள் என்றான் சரவணன். 'நன்றிகள் அண்ணா" எனப் பதில் கொடுத்தான் குமரன்.
அத்தோடு உரையாடலை நிறுத்திக் கொண்டார்கள். சபையில் கொஞ்சம் சலசலப்பு காணப் பட்டது. மந்திரி எழுந்து நின்று அரசிக்கும் ராஜகுமாரிக்கும் மற்றும் கூடி உள்ள ஊர்மக்களோடு "மருத்துவக் குழுமத்திற்கும் எனது வணக்கங்கள்" என்று கூறினார் .
அதோடு சத்தம் நிசத்தமானது.
அவர் மீண்டும் தொடர்ந்தார்
"நம் ராஜகுமாரி கடந்த இரண்டு ஆண்டுகளாய்த் தன்னோட சுய உணர்வுகளை இழந்ததும் நம் ராஜியமே இருள் சூழ்ந்த காடாக இருந்ததும் எல்லோரும் அறிந்த விடையமே. அப்படிப் பட்ட பெரும் சோதனையில் இருந்து நமக்கெல்லாம் விடுதலை கொடுத்து மீண்டும் அரண்மனையின் சூரிய ஒளியை நடுக் கூடாரத்தில் கொண்டு வந்து நிறுத்தி நம்மோட மனதிற்கும் ஆட்சிக்கும் ஏன் ஊருக்கே ஒளி கொடுத்த நமது மருத்துவர் குமரகுரு அவர்களுக்கு எல்லோர் சார்பாகவும் நன்றிகளைக் கூறிக் கொள்கின்றேன்.
அத்தோடு அவருக்கான பல பெரும் விசயங்கள் அற்பணிப்பிடக் காத்திருக்கு அதனை நமது மகாராணியார் தன் சொற்பொழிவில் கூறுவார் அதனை அனைவருக்கும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.அதோடு அனைவருக்கும் முன்பு போல் நமது பாசக் கடல் அன்னபூரணி இளைய இளவரசி அவர்களே தங்கள் கரங்களால் உங்களுக்கு உணவளிப்பார் நாம் செய்த பாவம் தீர்ந்தது. மகிழ்வோடு உணவு உண்டு புறப்படுங்கள்" என்று கூறு அரசியிடம் நோக்கி கரம் கூப்பி விட்டு அமர்ந்தார்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments