Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-12


ஈகை

குறள் மொழி 19

19. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

 குறள் எண் : 226

குறள் மொழியின் பொருள் :

ஏழைகளின் கொடிய பசி நோயை நீக்குவதே மிகவும் உயரிய பண்பாகும். அதுவே ஒருவன் தான் பெற்ற செல்வத்தைச் சேர்த்து வைக்கத் தக்க சிறந்த இடமாகும். 

நபிமொழி :

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமியப் பண்புகளில் சிறந்தது எது ? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்), "பசித்தோருக்கு நீரும், உணவும் அளிப்பதே உயரிய சிறந்த பண்பு” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ்(ரலி), நூல் : புகாரி

வெஃகாமை

குறள் மொழி 20

20. நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றி
குற்றமும் ஆங்கே தரும்.

குறள் எண் : 171

குறள் மொழியின் பொருள் :

தனக்கு உரிமையில்லாத பிறர்பொருளை
நேர்மையின்றி கவர நினைப்பவன் குடியும் அழிந்து, குற்றத்திற்கும் ஆளாவான்.

நபிமொழி

பிறர் பொருள் ஆக்கிரமித்தல், கவர்தல் தவறானது.ஒரு நிலத்தில் இருந்து ஒரு பகுதியைத் தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுத்தப்பட்டு விடுவான்.
(நபிமொழி : புகாரி –2454)
ஆதாரம் : நூல் - அஹமத்

(தொடரும்)

 


Post a Comment

0 Comments