
குறள் 56:
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள்
பெண்.
அக்கறை கொண்டே குடும்பத்தை, சார்ந்தோரை எக்கணமும் காப்பவள் பெண்.
குறள் 57:
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.
சிறைவைக்கும் பெண்ணடிமை காக்குமா? பெண்ணின் முறையான பண்புகளே காப்பு.
குறள் 58:
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு.
இல்லறப் புத்துலகம் பொன்னாகும் பெண்ணுக்கோ இல்லறத்தான் தன்மை பொறுத்து.
குறள் 59:
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை
தாறுமாறாய் வாழ்வில் இணையர் அமைந்துவிட்டால் ஏறுபோல் நன்னடை ஏது?
குறள் 60:
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு.
பண்புகளே இல்லறத்தின் வேராகும்! பிள்ளைகள் நல்லவராய் வாழ்ந்தால் புகழ்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments