
காலையில் இட்லி அல்லது தோசை செய்தால் அதற்கு சத்துள்ள ஒரு தொக்கு செய்ய வேண்டும் என நினைத்தால் இந்த புதினா தொக்கை ஒரு முறை செய்து காருங்க இனி எப்போதும் இதை தான் செய்வீர்கள்.
புதினா செரிமானத்தை மேம்படுத்தி, குமட்டல், ஒற்றைத் தலைவலி, மற்றும் அஜீரணக் கோளாறுகளைக் குறைக்கிறது.
மேலும், இது கெட்ட சுவாசம், சைனஸ் தொற்று, பதற்ற தலைவலி மற்றும் மாதவிடாய் பிடிப்புகளை சரிசெய்ய உதவுகிறது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த புதினா, உடலுக்கு புத்துணர்ச்சியையும், நோயெதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது.
தேவையான பொருட்கள்
புதினா - 1 கட்டு
புளி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
வர மிளகாய் - 2
கடுகு - 1 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் புதினாவை நன்கு சுத்தம் செய்து தனி இலைகளாக பிய்த்து வைத்து கொள்ளவும். பின்னர் அதை கழுவி வைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் புதினாவுடன் பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
புதினா நன்கு சுருண்டு வதங்கும் வரை வதக்கவும். பின்னர் வர மிளகாய், உப்பு, புளி சேர்த்து சிறிது வதக்கி ஒரு மிக்சியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகை போட்டு வெடிக்க விட்டு அரைத்த புதினா விழுதை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
இவை நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வந்தவுடன் இறக்கி ஆற வைத்து சுத்தமான பாட்டில்களில் போட்டு வைக்கவும். சூப்பரான மற்றும் சுவையான புதினா தொக்கு தயார். இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
manithan

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments