
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் முக்கிய ஆல்ரவுண்டர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், பேட்டிங் செய்யும்போது கழுத்தில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக கேப்டன் ஷுப்மன் கில் காயம் அடைந்தார்.
காயம் தீவிரமானதால், அவர் மீதமுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை, தற்போது அவரது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதற்கிடையே முக்கிய ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி ஏற்கனவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால், முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, அவர் விலகிச் சென்று இந்தியா 'ஏ' அணியில் இணைந்து தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டிருந்தார்.
தற்போது ஷுப்மன் கில்லின் காயம் காரணமாக, நிதீஷ் குமார் ரெட்டி தனது இந்தியா 'ஏ' அணிக்கான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியைக் கூடத் தவிர்த்துவிட்டு, அவசரமாக மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
நிதீஷ் குமார் ரெட்டி ஒரு வலது கை பேட்ஸ்மேன். தற்போதைய இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் ஏற்கனவே அதிகப்படியான இடது கை பேட்ஸ்மேன்கள் (யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல்) இருப்பதால், நிதிஷ் குமார் ரெட்டி ப்ளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.
சுப்மன் கில்லிற்கு ஏற்பட்ட காயம் தீவிரம் அடைந்து அவர் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினால் அவருக்கு பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி விளையாடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments