
நைஜீரியாவில் உள்ள ஒரு கத்தோலிக்கப் பள்ளியிலிருந்து சுமார் 220 மாணவர்களும் ஆசிரியர்களும் கடத்தப்பட்டுள்ளனர்.
நைஜர் மாநிலத்தின் செயின்ட் மேரிஸ் (St Mary's) பள்ளியில் அந்தச் சம்பவம் நடந்தது.
துப்பாக்கிக்காரர்கள் அதிகாலை 1 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் கடத்தியதாகக் கத்தோலிக்கத் தேவாலயம் தெரிவித்தது.
கடத்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் பெண்கள்.
மூன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்கம்பக்க மாநிங்களில் உள்ள பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வாரம் திங்கட்கிழமை (17 நவம்பர்) நைஜீரியாவின் கெப்பி (Kebbi) மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியிலிருந்து 25 பெண் மாணவர்கள் கடத்தப்பட்டனர்.
ராணுவம் கடத்தப்பட்டோரைத் தேடி வருகின்றது.
மாணவர்களைக் காப்பாற்ற அதிகாரிகள் காடுகளை அலசி வருகின்றனர்.
நைஜீரியாவில் கிறிஸ்துவர்கள் கொல்லப்படுவதைக் கண்டிக்க ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்மையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) மிரட்டியிருந்தார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments