
உலக நாடுகள் வேகமாக முன்னேறி வருகிறது. நவீன தொழிற்நுட்பத்தை நோக்கி, உலக நாடுகள் நகர்ந்து வருகிறது. அதே நேரத்தில், இன்றைய காலத்து பெண்கள், இளைஞர்கள் என பலரும் தனிப்படை வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்க கூட முடியாமல், ஓடிக் கொண்டே இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில், சீனாவில் நடந்த வினோத போட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உலகின் சோம்பேறி மனிதன் போட்டி
அதாவது, சீனாவில் வணிக வளாகம் ஒன்றில் வினோத போட்டி ஒன்று நடந்தது. இந்த போட்டியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். சுமார் 240 போட்டியாளர்கள் இந்த வினோத போட்டியில் கலந்து கொண்டனர். அதாவது, உலகின் சோம்பேறி மனிதனுக்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சில இளைஞர்கள் டயர்ப்பர் அணிந்து, கலந்து கொண்டனர்.
ஏனென்றால், இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் எழுந்திருக்கவே கூடாது என்பது விதி. தொடர்ந்து, பல மணி நேரம் படுத்திருப்பது தான் இந்த போட்டியின் சாரம்சமாக உள்ளது. கழிவறைக்கு கூட செல்லக் கூடாதாம். பெட்டில் படுத்தே இருப்பவர்கள் கடைசியில் வெற்றி பெற்றவர்கள். எழுந்திருக்கவோ, உட்காரவோ, கழிவறைக்கு செல்லவோ கூடாது என்பது தான் விதி. இந்த விதிகளை மீறுபவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.
அதே நேரத்தில் போட்டியாளர்கள் தங்கள் மொபைல் போனைப் பயன்படுத்தவும், புத்தகங்களைப் படிக்கவும், எடுத்துச் செல்லும் பொருட்களை ஆர்டர் செய்யவும், திரும்பிப் பார்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும், எழுந்து உட்கார்ந்து கழிப்பறைக்குச் செல்வது விதிகளுக்கு முற்றிலும் எதிரானது.
World Laziest Man: போட்டி எப்படி நடக்கும்?
இந்த சோம்பேறித்தன போட்டி சீனாவின் உள் மங்கோலியாவில் உள்ள பாடோவில் நடந்தது. நவம்பர் 15 அன்று காலை 10:18 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை இந்த போட்டி முடிவடைந்தது. இந்த போட்டியில் சிலர் சொந்தமாக போர்வைகள், பவர் பேங்க்கள் மற்றும் உணவைக் கொண்டு வந்தனர். மற்ற போட்டியாளர்கள் மெத்தையில் இருந்து வெளியேறாமல் இருக்க டயப்பர்களை அணிந்தனர்.
உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் விலக்கப்பட்டனர், மேலும் யாராவது நோய்வாய்ப்பட்டவர்கள் உடனடியாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 24 மணி நேரத்திற்குள், மொத்தம் 186 போட்டியாளர்கள் வெளியேறினர். 54 பேர் மட்டுமே அடுத்த நாள் வரை இருந்தனர். இதில் ஒரு போட்டியாளர் ஒரு போட்டியாளர் எழுந்து உட்கார்ந்து தனது காலணிகளை மீண்டும் அணிந்த பிறகு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், சில போட்டியாளர்கள் நீண்ட நேரம் படுக்க முடியாததால், அவர்கள் தாங்களாகவே போட்டியில் இருந்து வெளியேறினர். இதில் கடைசியாக மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இருந்தனர்.
World Laziest Man: படுத்திருந்தேரூ.37,000 சம்பாதித்த இளைஞர்
இதில் கடைசியாக நவம்பர் 16 அன்று உள்ளூர் நேரப்படி, 19:53 மணிக்கு 33 மணி நேரம் 35 நிமிடங்களுக்குப் பிறகு வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார். வெற்றி பெற்ற இந்த இளைஞர் ஒரு முறை கூட எழுந்திருக்காமல், படுக்கையில் படுத்திருந்தே இருந்துள்ளார். கிட்டதட்ட அவர், 33 மணி நேரம் தொடர்ந்து படுத்திருந்துள்ளார். இதனால், அவர் உலகின் சோம்பேறி மனிதன் என்ற பட்டத்தை பெற்று வெற்றி பெற்றார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்த இளைஞருக்கு 3,000 யுவான் பரிசு அளிக்கப்பட்டது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 33 மணி நேரம் படுத்திருந்து ரூ.37,300 பெற்றார். சீனாவில் நடந்த போட்டி இந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments