
பிணம் என்று சொன்னால் கூடப் பிறந்த உறவுகள் கூட ஒதுங்கி போகும் இக் காலத்தில் , வயது முதிர்ந்த பெற்றோர்களை வைத்திய சாலைக்கு பொருப்பு சாட்டி விட்டு நழுவி விடும் இக்காலத்தில்
மனிதனுக்காக...மனிதன் எவனோ....
அவன்தான் மனிதன்...எனும் கொள்கையோடு
1974 ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை சுமார் 50 ஆண்டு காலமாக 20.000 கும் மேற்பட்ட ஜனாஸாக்களை பல துறைகளில் இருந்து மீட்டி அடக்கஸ்தலம் வரை தனது சொந்த பணத்தால் வாங்கிய ( அவசர சேவை ) வண்டியின் ஊடக எடுத்துச் செல்லும் மா மனிதர்
"மொகமட் ஹுசைன் றஷாத்" ( ஹுசைன் போல்ட் )ஆவார்கள்....
தமது 17ம் வயதில் தன்னுடைய பாட்டனாரின் சமூக சேவை நற்பணியை மையமாக வைத்து இப்பணியை மேற்கொள்ளும் இவரது தற்போது வயது 70 ஆகும்.
இவர் கொழும்பு மாநகரத்தை பிறப்பிடம் கொண்டவர் ஆவார்.
தன்னுடைய துடி துடிப்பான வாலிபத்தில் தமது முன்னோரின் வழிகாட்டல் மூலமாக இச் சிறப்பான பணியை ஆரம்பம் செய்து இறை அருளால் தமது 70 ம் வயது முதுமை பருவத்தில் கூட இன்னும் தொடர்ச்சியாக மனிதநேயத்தை நேசிக்கும் இம் மாமனிதரின் நற்பணி தொடர வாழ்த்துவோமாக.....
மேலும் கெளரவ ஹுசைன் றஷாத் அவர்கள் தனது அனுபவத்தை எம்முடன் பகிர்ந்து கொள்ளும் போது இவ்வாராக கூறினார்கள் ....

" நான் இப்பணியை 24 மணித்தியாலமும் செய்துகொண்டு இருக்கின்றேன்.
இதனை எவ்விதமான உலகலாவிய நோக்கத்திற்காகவும் செய்யவில்லை மாறாக இறை திருப்தியையும் மனித நேயத்தையும் கருத்தில் கொண்டு அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்து வசதி அற்றவர்கள் கஷ்டப்படுபவர்கள், என என்னை நாடி வருபவர்களுக்கு உதவி செய்கின்றேன்.
அவ்வாறே நான் தேடிச்சென்று உதவி செய்பவர்களும் இருக்கிறார்கள் .
இது அத்தனையும் அல்லாஹ்வின் பெயரால் செய்கின்றேன்...
வெருமனே வைத்திய சாலையில் இருந்து மீட்கப்படும் ஜனாஸாக்கள் மாத்திரமின்றி வாகன விபத்தில் சிக்கி சிதறுண்ட ஜனாஸாக்கள் , குலத்தில், ஆற்றில் , கடலில் விழுந்து பல நாட்கள் கடந்த ஜனாஸாக்கள் ,
ஆதரவற்ற , உறவுகள் அற்ற ஜனாஸாக்கள் என்று பல விதமான ஜனாஸாக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் பாக்கியத்தை எனது றப்பு எனக்கு தந்துள்ளான்.
அல் ஹம்துலில்லாஹ்!
"ஜனாஸாக்களை மற்றுமின்றி கடும் நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்களை கூட இனம் கண்டு அவர்களுக்காக என்னால்முடிந்த அளவு உதவிக்கரம் நீட்டுகின்றேன். "

இவ்வாறு தமது இச் சிறப்பான பணியை பற்றி கூறி விடைப் பெறும் சகோதரர் ஹுசைன் றஷாத் இன்று கூட 05 ஜனாஸாக்களை மீட்டி அவைகளுக்கான அத்துனை விடயங்களையும் பூர்த்தி செய்துவிட்டு வந்தேன் என்று கூறி புறப்பட்டார்கள்.
அல்லாஹ் இவரது நற்பணிகளை அங்கீகரித்து நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் வழங்குவானாக.....
M.H.M நியாஸ் ( J P_whole island )
தலைவர்
மீடியா லிங்க்.
அல் அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றம்.
கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments