Ticker

6/recent/ticker-posts

பெங்களூருவில் பட்டப்பகலில் 70 மில்லியன் ரூபாய் கொள்ளை- தேடல் வேட்டை தீவிரம்


இந்தியாவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்த ஆடவர்கள் 70 மில்லியன் ரூபாயைக் (சுமார் 1.02 மில்லியன் வெள்ளி) கொள்ளையடித்திருக்கின்றனர்.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரில் பட்டப் பகலில் அந்தச் சம்பவம் நடந்தது.

பரபரப்பான சாலையில் வங்கிக் கிளைகளுக்கு இடையே பணத்தை எடுத்துச் சென்றுகொண்டிருந்த வேனை ஒரு SUV கார் மறித்தது..

வேனில் ஓட்டுநர், ஆயுதம் ஏந்திய இரு பாதுகாவலர்கள்,
பணக் காப்பாளர் ஆகியோர் இருந்தனர்.

SUV காரில் 6 ஆடவர்கள் இருந்தனர்.

அவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியைச் சேர்ந்தவர்கள் என்று வேனில் இருந்தவர்களிடம் தெரிவித்தனர்.

பெரிய அளவிலான பணத்தை நகர்த்துவதற்கு சரியான ஆவணங்கள் உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்றும் கொள்ளைக்காரர்கள் குறிப்பிட்டனர்.

வேனில் ஓட்டுநரை மட்டும் விட்டுவிட்டு, ஆயுதங்கள் ஏதுமில்லாமல் எஞ்சியோரை SUV காரில் ஏற்றினர்.

சிறிது தூரம் சென்ற பின் கொள்ளைக்காரர்கள் துப்பாக்கி முனையில் பணத்தை வேனிலிருந்து SUV காருக்கு மாற்றிவிட்டுத் தப்பினர்.

அந்தப் பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் அதிகம் இல்லை என்று BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பணம் இடமாற்றச் சேவையை வழங்கிய நிறுவனம் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறது.

நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் கொள்ளைச் சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா என்பதைக் காவல்துறை விசாரிக்கிறது.

கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட SUV காரைக் காவல்துறை கண்டுபிடித்துவிட்டதாக BBC சொன்னது.

கொள்ளையர்கள் தீவிரமாகத் தேடப்படுகின்றனர்.

கூடிய விரைவில் அவர்கள் பிடிபடுவர் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் கூறினார்.

seithi

 


Post a Comment

0 Comments