Ticker

6/recent/ticker-posts

அழகிய பயணம் !


இந்தக் கதையை முழுவதுமாகப் படித்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்

“ஸலாத்துல் மக்ரிப்" செய்தபின், அவள் அலங்காரம் செய்து, அவளுடைய அழகான வெள்ளை ஆடையை அணிந்து, திருமணத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள்.

அலங்காரம் முடிக்கும் போது, அவள் 'இஷா'வின் அதானைக் கேட்டாள். அவள் வுதூ முறிந்துவிட்டதாக  உணர்ந்தாள். 

அவள் தன் தாயிடம் சொன்னாள்: 
"அம்மா,'இஷா' தொழுகைக்கு அதான் கேட்குது . நான் வுதூ செய்து இஷா தொழுகைக்கு போக வேண்டும்”என்றாள். 

அவள் அம்மா அதிர்ச்சியடைந்தாள்: “உனக்கென்ன பைத்தியமா?!! விருந்தினர்கள் உனக்காகக் காத்திருக்கிறார்கள்.எல்லாம் முடிந்தவுடன் தொழுதிடலாம்.நீ வுதூ செய்கிறபோது உன்னுடைய்ய ஒப்பனை களைந்து விடும்.உடனே வா"என்றாள் தாய்.

"முடியாது.. நான் இஷா முடித்துவிட்டே வருவேன்" என்று அந்த மகள் உறுதியாக சொன்னாள்.

"நான் உன்னுடைய தாய்.நான் சொல்றதக் கேளு.நீ இந்த நேரத்தில வுதூ செய்தால் மீண்டும் அலங்காரம் செய்ய வேண்டும்.பிடிவாதம் பிடிக்காம வா" என்றாள் தாய் 

மகள் பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.

தாய் கெஞ்சினாள்"எல்லோருக்கும் முன்னிலையில் நாங்கள் அவமானப்படவேண்டுமா ?உன்னுடைய ஒப்பனை களைந்துவிட்டால் நீ அழகாய் இல்லை என்று சொல்வார்கள்.தயவு செய்து வா"என்றாள்.

மகள் சிரித்துக் கொண்டே கேட்டாள் :"நான் அழகாக இருக்க மாட்டேன் என்பதால் நீங்கள் கவலைப்படுகிறீர்கள்.வந்திருக்கும் விருந்தினர்களைப் பற்றி கவலைப் படுகின்றீர்கள்.ஆனால் நான் என்னைப் படைத்தவனைப் பற்றி  கவலைப்படுகிறேன்.ஏனென்றால், நான் எனது சலாவை தவறவிட்டால், என்னைப் படைத்தவனின் கோபத்திற்கு ஆளாகி விடுவேன்.நான் இந்த தொழுகையை முடித்துவிட்டுப் போனால் என்னைப்படைத்தவன் முன் நான் அழகாயிருப்பேன்.அதுவே போதும்."என்றவள் வுதூ செய்துவிட்டு அமைதியாக தொழுகைக்குச் சென்றாள்.

மணப்பெண்ணின் அலங்காரம் கலைந்திருந்தது.

தாய் ஏதேதோ முனுமுனுத்தபடி இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

"அல்லாஹு அக்பர் ".தக்பீர் கட்டினாள்.

அவளுடைய உள்ளமும் உடலும் தூய்மையாகவும் உறுதியாகவும் இருந்தது.

சுஜூதுக்குச் சென்றாள்.

பின்னர் எழுந்திருக்கவே இல்லை.

"இன்னாலில்லாஹி வயின்னா இலைஹிராஜுஹூன்"

படைத்தவனிடம் அழகாகச் சென்றாள் அந்தப் பெண். 

குறிப்பு:
இது ஒரு உண்மைக் கதை.
இன்று நாம்  தொழுகையை உதாசீனம் செய்துவிட்டு உலக ஆசாபாசங்களுக்காக அலைகின்ற நிலையைக் காண்கின்றோம்.
படைத்தவனைப் பற்றிய பயமின்றி நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கின்ற இன்றைய சமுதாயத்திற்கு இந்த சம்பவம் ஒரு
படிப்பினையாக இருக்க வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக 

அனுப்பியவர் 
சுபைதா நஸீர் 
துபாய்    


 Ai SONGS

 



Post a Comment

0 Comments