Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-88


வேலிக்கப்பாலிருந்து பணக்கட்டை செரோக்கியின் 
கைகளில் திணித்து விட்டு பிரியாவிடை பெற்றுக்கொண்ட அவர்களை கண் மறையும்வரை செரோக்கி வெளிக்கிப்பால் நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் இல்லையேல் தனது ரெங்க்மா இப்போது உயிரோடிருந்திருக்க மாட்டாள். ஆற்றில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் மீனினங்கள் அவளுடலைப் பதம் பார்த்துக் கொண்டிருக்கும். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?  ஏன் வந்தார்கள்? எதற்காகத் தன் ரெங்க்மாவைக் காப்பாற்றித் தந்தார்கள்? அந்தக்  மொழிவலவன் எதற்காக அவனுக்குப் பணம் தர வேண்டும்? அவனது தாயார் பல்சுவை உணவு பரிமாறியதற்காகவா? அல்லது அவன் அழைத்துச் சென்று “ஸ்ட்ரோபெர்ரி”யில் அனுசரித்தமைக்காகவா? செரோக்கிக்கு  எதுவுமே புரியவில்லை!

இந்த இயக்கங்களுக்கான சக்தி ஒன்றின் தேடலை அவனது உள்ளம் எதிர் நோக்கியது. 

தன்னிடமிருந்த  புராதன நூலிருந்து கலட்டியெடுக்கப்பட்ட இரண்டு தாள்களுக்காகத்தான் இந்தப் பணக்கட்டு அன்பளிப்பாக்கப்பட்டது என்பதை எப்போதாவது ஒருநாள் புரிந்துகொள்ளத்தான் போகின்றான்.

ஆவணங்களைத்  தேடுவதற்கும் ஆய்வுகளை மேற்கொள்வதற்குமாகத்  தமது  சொந்த நாட்டிலிருந்து பெருந்தொகைப் பணத்தோடுதான் இந்தப் பயணத்தை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். அந்தப்பெருவெள்ளத்தில் இதுவொரு சிறு துளிதான்! 

“தீய செயல்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் ‘சைட்டோகைனஸிஸ்’ அற்றவர்கள்!  இது இல்லாதவர்கள் உலகில் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள்.  மனித உடலில் இது  இல்லாமலாகின்றபோது உடலை நோக்கி வரும் தீய நுண்ணுயிர் எதனையும்  எதிர்க்கக் கூடிய சக்தி இல்லாமற்போகலாம்.  அவர்கள் உலகில் உயிர் வாழும் தகுதி இழக்கப்படுவர்.” மூத்தவர் இறுதியாகத் தனது வைத்திய ஆசிரியரிடம் கற்ற பாடமிது. அது அவர் பாதுகாத்து வைத்திருந்த நூலில்  அழகாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

விஞ்ஞான ரீதியாக நுண்ணுயிரை எவ்வாறு விலங்கினங்களிடத்தில்  உருவாக்கலாம் என்பதற்கான குறிப்புகளடங்கிய நான்கு பக்கங்கள் கொண்ட இரண்டு தாள்களையே “மொழிவலவன்” புராதன நூலிலிருந்து கலட்டியெடுத்தான்! அது அவனுக்கு எந்த வகையில் பிரயோசனப்படப் போகின்றது? எதற்குப் பிரயோசனப்படப் போகின்றது?

(தொடரும்)

செம்மைத்துளியான்

 


Post a Comment

0 Comments