
பாடல் - 21.
நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் ஊரும் வருந்திருவும்
வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும் தரும்
செந்தாமரையாள் தான்
விளக்கம்:
நல்ல மனம் படைத்த பெரியவர்களுக்கு, திருமகளானவள், நல்ல நீர், நிழல் தரும் மரங்கள், பயிர் விளையும் நிலங்கள் என்று நிறைய வசதிகளைக் கொடுத்து, பேரோடும் புகழோடும் வளத்தோடும், நீண்ட நாள் வாழ வைப்பாள்.
பாடல் - 22.
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்
காவிதான் போயினபின் (பி)யாரே யநுபவிப்பார்
பாவிகள் அந்தப் பணம்.
விளக்கம்:
இந்த உடம்பை விட்டு உயிர் போன பிறகு, தாங்கள் சேர்த்து வைத்துள்ள பணத்தை யார் அனுபவிக்கப் போகிறார்கள். இது தெரியாமல் கேடு கெட்ட மனிதர்கள் பலர், ரொம்ப பாடு பட்டு தேடிச் சேர்த்த பணத்தை தாங்கள் அனுபவிக்காமல், அதை யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைத்துக் கொள்கிறார்கள்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments