Ticker

6/recent/ticker-posts

இந்த பிட்ச்சில் நான் கூட விக்கெட்ஸ் எடுப்பேன்.. இந்தியாவின் தோல்விக்கு தவறான செலக்சனே காரணம்.. ஸ்ரீகாந்த்


தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 
இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 15 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியா அவமானத் தோல்வியை சந்தித்தது. 

அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்குசாதகமான பிட்ச் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

இத்தனைக்கும் கடந்த 2024 நியூசிலாந்து தொடரில் இந்தியா சொந்த மண்ணில் ஒயிட்வாஸ் தோல்வியை சந்திக்க சுழலுக்கு சாதகமான பிட்ச்களே முக்கிய காரணமானது. 

ஆனாலும் அதிலிருந்து பாடத்தைக் கற்காத இந்திய அணி மீண்டும் கொல்கத்தாவில் அதே போன்ற பிட்ச்சை அமைத்து அவமானத் தோல்வியை சந்தித்துள்ளது.

ஏனெனில் கொல்கத்தாவில் தாங்கள் தான் அப்படிப்பட்ட பிட்ச் வேண்டுமென்று கேட்டு வாங்கியதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்படிப்பட்ட முட்டாள்தனமான பிட்ச்சில் விளையாடலாம் என்று கௌதம் கம்பீர் எடுத்த முடிவே இந்தியாவின் தோல்விக்கு காரணமானதாக முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். 

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பிட்ச்சில் எந்த பேயும் இல்லை என்றும் வெற்றிக்கு உங்களுடைய சிறந்த பேட்டிங் டெக்னிக்கை காண்பிக்க வேண்டும் என்றும் கௌதம் கம்பீர் சொன்னதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” “இது போன்ற பிட்ச்சில் எப்படி விளையாட முடியும்? அங்கே நிறைய பேட்ஸ்மேன்கள் பந்தை தடுத்தும் எல்பிடபுள்யூ அல்லது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்கள். இத்தனைக்கும் 
தென்னாப்பிரிக்க அணி வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்ட பலமான அணி கிடையாது. 

எனவே அவர்களை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு ஏன் இது போன்ற ஆடுகளத்தை அமைத்து வீரர்களின் டெக்னிக்கை குற்றம் சொல்கிறீர்கள்?”

“இது சரியல்ல. நீங்கள் யாராக இருந்தாலும் இப்படிப்பட்ட ஆடுகளத்தில் எப்படி உங்களால் தாக்குப்பிடிக்க முடியும்? அத்தனை வீரர்களில் பவுமா மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்தார். 

சொந்த மண்ணில் கடந்த 6 போட்டிகளில் இந்தியா 4 தோல்விகளைச் சந்தித்துள்ளது மோசமான ரெக்கார்ட். இத்தனைக்கும் நாம் வலுவான இந்திய அணியை களமிறக்குகிறோம். இப்படிப்பட்ட பிட்ச் தான் 
வேண்டுமென்று கேட்டதாக கம்பீர் சொல்கிறார்”

“ஆனால் அது டெஸ்ட் போட்டிக்கு சரியான ஆடுகளம் அல்ல. ஏனெனில் பந்து முதல் நாளிலேயே சுழல்கிறது. பல வருடங்களாகியும் நாம் தவறிலிருந்து பாடத்தைக் கற்கவில்லை. ஒருவேளை அந்த பிட்ச்சில் ஸ்டம்ப் லைனில் பந்து வீசினால் நான் கூட விக்கெட்டுகளை எடுப்பேன். அது முட்டாள்தனமான பிட்ச். கம்பீர் பேசுவது அபத்தமானது. ஏனெனில் இரு அணிகளுமே தடுமாறின. 

உங்களுடைய முடிவால் தற்போது இந்தியா அழுத்தத்தின் கீழ் தள்ளப்பட்டுள்ளது” என்று கூறினார்.

crictamil

இலங்கை |  இந்தியா | உலகம் 

 


Post a Comment

0 Comments