Ticker

6/recent/ticker-posts

ஷேக் ஹசீனா தீர்ப்பு - இக்கட்டில் இந்தியா


பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டது இந்தியாவிற்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேஷ் நீதிமன்றம் ஒன்று அவருக்கு மரண தண்டனை விதித்தது.

அது அரசியல் உள்நோக்கம் கொண்ட தீர்ப்பு என்று திருவாட்டி ஹசீனா நிராகரித்திருக்கிறார்.

அவர் சென்ற ஆண்டு (2024) ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

இதற்கு முன்பு பங்களாதேஷ் விடுத்த கோரிக்கைகளுக்கு இந்தியா அதிகாரபூர்வமாகப் பதிலளிக்கவில்லை என்று பிபிசி (BBC) சொன்னது.

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு அடைக்கலம் தருவது சரியல்ல என்று அது குறிப்பிட்டது.

பங்களாதேஷுக்கும் இந்தியாவுக்கும் இடையே குற்றவாளிகளைத் திரும்ப ஒப்படைக்கும் உடன்பாடு உள்ளது.

ஆனால் திருவாட்டி ஹசீனாவுக்கு எதிரான தீர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டது, நல்லெண்ணத்தில் செய்யப்படாதது என்று இந்தியா கருதினால் அவரைத் திருப்பி அனுப்ப மறுக்கலாம் என்று சட்ட நிபுணர்கள் நம்புகின்றனர்.

திருவாட்டி ஹசீனா ஆட்சியில் இருந்தபோது அவர் இந்தியாவுடன் நெருக்கமான உறவைக் கடைபிடித்தார்.

புதிய தற்காலிக அரசாங்கம் பாகிஸ்தானுக்கு நெருக்கமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

புதிய சூழ்நிலையை இந்தியா மிகவும் கவனமாகக் கையாளும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

seithi

 


Post a Comment

0 Comments