
கோவை விமான நிலையம் பகுதியில் காரில் ஆண் நண்பர் உடன் பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவியை தூக்கி சென்ற பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்த மாணவி கோவையில் விடுதி ஒன்றில் தங்கி தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் நேற்றிரவு 11 மணியளவில் கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகரில் காட்டுப் பகுதியில் காரில் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மூன்று இளைஞர்கள், கார் கண்ணாடியை உடைத்து விட்டு ஆண் நண்பரை ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். ஆண் நண்பர் நிலைகுலைந்த நிலையில், அந்த கும்பல் கல்லூரி மாணவியை காட்டுப்பகுதிக்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பினர்.
இதற்கிடையே, அந்த பெண்ணின் ஆண் நண்பர் மயக்கம் தெளிந்த பிறகு காவல் துறைக்கு புகார் அளித்துள்ளார். அதன்பேரில் அதிகாலை நேரத்தில் காவல்துறையினர் காட்டுப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி, மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவியின் ஆண் நண்பர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
மாணவியை வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கைதுசெய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் தெரிவித்துள்ளார். குற்றச்சம்பவம் நடைபெற்ற பிருந்தாவன் நகர்ப் பகுதியில் தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments