Ticker

6/recent/ticker-posts

ஷாக் வீடியோ! கீழே விழுந்து நொறுங்கிய இந்தியாவின் தேஜஸ் விமானம் - விமானி உயிரிழப்பு!

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் இப்போது விமான கண்காட்சி நடந்தது. உலகின் முக்கிய விண்வெளி நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் துபாய் விமானக் கண்காட்சி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அந்த வகையில், (நவம்பர் 21) விமான கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் 50 நாடுகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களும் 148,000க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்களும் பங்கேற்கின்றனர். 

கீழே விழுந்து நொறுங்கிய இந்தியாவின் தேஜஸ் விமானம்​ இதில் பாம்பார்டியர், டசால்ட் ஏவியேஷன், எம்ப்ரேயர், தேல்ஸ், ஏர்பஸ், லாக்ஹீட் மார்டின் மற்றும் காலிடஸ் போன்ற முக்கிய சர்வதேச விமானங்கள் இருந்தன. இந்த விமான சாகச நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விமானங்கள், போர் ஜெட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் சாகச நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவில் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. சாகச நிகழ்ச்சிக்கு நடுவே, தேஜஸ் விமானம் விபத்து ஏற்பட்டுள்ளது. சாகசத்தில் ஈடுபட்டிருந்த விமானம், ஒரே நொடியில் கீழே விழுந்து வெடித்துள்ளது. இது அங்கிருந்த பார்வையாளர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விமானத்தில் விமானி உயிரிழந்துள்ளார். இதனை இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இந்திய விமானப்படை, "துபாய் விமான கண்காட்சியில் இன்று நடைபெற்ற வான்வழி கண்காட்சியின் போது ஐ.ஏ.எஃப் தேஜாஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிக்கு உயிரிழப்பு ஏற்பட்டது. உயிர் இழப்புக்கு ஐ.ஏ.எஃப் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது மற்றும் இந்த துயரமான நேரத்தில் அவரின் குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளது.

தேஜஸ் விமானம்

தேஜஸ் முதன்முதலில் 2001 இல் பறந்து 2015 இல் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு தேஜஸ் விமானம் பயன்பாட்டுக்கு வந்தது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) தயாரித்த இந்த விமானம், ஒற்றை இருக்கை கொண்ட இலகுரக போர் விமானம் (LCA).

தேஜஸ் என்பது போர் விமானமாகும், இது வான் பாதுகாப்பு பணிகள், தாக்குதல் வான் ஆதரவு மற்றும் நெருக்கமான போர் நடவடிக்கைகளைச் செய்ய உருவாக்கப்பட்டது. தேஜஸ் விமானம் பாதுகாப்பு படையில் சேர்க்கப்பட்ட சில ஆண்டுகள் ஆகிறது. 

தேஜஸ் விமானம் இரண்டாவது விமான விபத்தை சந்திக்கிறது. மார்ச் 2024 இல், ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. 2001 ஆம் ஆண்டு அதன் முதல் சோதனைப் பயணத்திற்குப் பிறகு விமானத்தின் 23 ஆண்டுகால வரலாற்றில் இதுபோன்ற முதல் விபத்து இதுவாகும். இந்த விபத்தில் விமானி உயிர் பிழைத்தார். இந்த நிலையில், தற்போது துபாயில் தேஜஸ் விமானம் விபததுக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார்.

zeenews

 


Post a Comment

0 Comments