
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) நியூயார்க் நகரின் புதிய மேயர் ஸோரான் மம்தானி (Zohran Mamdani) தேர்தலில் வெற்றி பெற்றதைப் பாராட்டியிருக்கிறார்.
அரசியல் களத்தில் எதிரும் புதிருமான இருவரும் நேற்று (21 நவம்பர்) வெள்ளை மாளிகையில் சந்தித்தனர்.
திரு மம்தானியைத் தொடர்ந்து குறைசொல்லி வந்த அதிபர் டிரம்ப் இன்று நடைபெற்ற சந்திப்பு ஆக்ககரமாக அமைந்ததாகச் செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
நியூயார்க் நகரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் தமக்கும் திரு மம்தானிக்கும் இடையே கருத்து ஒற்றுமை இருப்பதாக அவர் சொன்னார்.
திரு மம்தானி சிறப்பாகச் செயல்பட்டால் அதில் தமக்கு மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.
79 வயது திரு டிரம்ப், 34 வயது திரு மம்தானியை இதற்குமுன் மிகவும் கடுமையாகக் குறைகூறிவந்தார்.
திரு மம்தானி வரும் ஜனவரி முதல்தேதி நியூயார்க் மேயராகப் பொறுப்பேற்பார்.
உகாண்டாவில் பிறந்த திரு மம்தானியின் தந்தை மஹ்முது மம்தானி (Mahmood Mamdani) ஒரு விரிவுரையாளர், அம்மா மீரா நாயர் (Mira Nair) திரைப்பட இயக்குநர்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments