
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்களுக்குத் தேவையற்ற வீரர்களை விடுவித்து தக்க வைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவீந்திர ஜடேஜா, ஷாம் கரண் ஆகியோரை டிரேடிங் முறையில் ராஜஸ்தானுக்கு கொடுத்தது.
அதற்கு பதிலாக சஞ்சு சாம்சனை 18 கோடி என்று பெரியத் தொகைக்கு சென்னை வாங்கியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அது மட்டுமின்றி இலங்கை வீரர் மதிசா பதிரனாவை சிஎஸ்கே அணி தக்க வைக்காமல் விடுவித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் ஜாம்பவான் மலிங்காவை போலவே ஸ்லிங்கா ஆக்சனை பயன்படுத்தி பந்து வீசக்கூடிய அவர் 2023 ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வெல்வதற்கு பவுலிங் துறையில் முக்கிய பங்காற்றினார்.
அதனால் மும்பை அணிக்காக பல வருடங்களாக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த மலிங்காவை போன்ற குட்டி மலிங்கா கிடைத்து விட்டதாக சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அத்துடன் பதிரனாவை சிறப்பாக பயன்படுத்தினால் இலங்கை அணியின் சொத்தாக இருப்பார் என்று தோனியும் பாராட்டியிருந்தார். அப்படிப்பட்ட நிலையில் கடந்த 2024, 2025 ஆகிய சீசன்களில் தடுமாற்றமாக விளையாடிய பதிரனாவை திடீரென சிஎஸ்கே கழற்றி விட்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் 2026 ஐபிஎல் ஏலத்தில் போதுமான தொகையுடன் களமிறவதற்காகவே 10 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட பதிரனாவை விடுவித்ததாக சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அதே சமயம் பதிரனாவை மீண்டும் குறைந்த விலைக்கு ஏலத்தில் வாங்க சிஎஸ்கே முயற்சிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“நாங்கள் ஏலத்தில் கணிசமான கையிருப்பு தொகையுடன் களமிறங்க விரும்பினோம். அது போக நாங்கள் ஏற்கனவே சாம் கரண், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை டிரேடிங் முறையில் கொடுத்து 2 கடினமான முடிவுகளை எடுத்தோம். அங்கேயே நாங்கள் சஞ்சு சாம்சனுக்காக 18 கோடிகளைக் கொடுத்தோம். எனவே கொடுக்கப்பட்டுள்ள சேர்க்கை மற்றும் கட்டமைக்க விரும்பும் புதிய அணி ஆகியவற்றைப் பொறுத்து நாங்கள் ஏலத்தில் பெரியத் தொகையுடன் களமிறங்க நினைக்கிறோம்”
“அது எங்களுக்கு வலுவான அணியைக் கட்டமைப்பதற்கான வாய்ப்பைக் கொடுக்கும். நாங்கள் எது செய்தாலும் அதை அணியின் நன்மைக்காகவே செய்ய முயற்சிக்கிறோம். நாங்கள் மீண்டும் பதிரனாரை வாங்க முயற்சிப்போம். அவை அனைத்தும் ஏலம் எப்படி செல்லப் போகிறது என்பதைப் பொறுத்து அமையும்” என்று கூறினார்
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments