Ticker

6/recent/ticker-posts

இதுக்குலாமா Divorce பண்ணுவாங்க! கணவர் செய்த காரியம்.. ஒரே இரவில் முடிவு எடுத்த மனைவி!


மாதந்தோறும் குறிப்பிட்ட வருமானம் வருவது என்பது மிகவும் முக்கியம். இதுதான் நம்முடைய அன்றாட செலவுகளை நிர்வகிக்க உதவுகிறது. ஒருமாதம் இல்லையென்றால், செலவுக்கு திண்டாட்டம் தான். 

அதே நேரத்தில், வேலை இல்லாத இருந்தால்,  நிதி ரீதியாக மட்டுமின்றி, குடும்பத்திலும் பல பிரச்னைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியொரு பிரச்னை தான், சீனாவைச் சேர்ந்த இளைஞருக்கு நடந்துள்ளது.

வேலையை இழந்த சீன இளைஞர்

சீனாவைச் சேர்ந்த 43 வயதான நபர் ரூ.6 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்தார். ஆனால், சில பல காரங்களால் அவர் தனது வேலையை இழந்துள்ளார். 

இதனால், அவரது மனைவி அவரை விவகாரத்து செய்யவும் முடிவு எடுத்துள்ளார்.  கியான்கியன் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், அரசுக்கு சொந்தமான நிறுவனத்தில் பணிபுரிந்தார். 

அரசு வேலையில் இருந்த அவர், மாதம் சுமார் ரூ.6.23 லட்சம் சம்பளம் வாங்கி வந்தார்.

இவர் மனைவியுடன் சீனாவில் வசித்து வந்துள்ளார். 

இவர் வாங்கும் சம்பளத்தில் பெரும் பகுதியை மனைவிக்காக செலவு செய்து வந்தாராம். 

மனைவியின் செலவுகளை சமாளிக்க அந்த நபர் தனது வீட்டையும் விற்றுள்ளார். அந்த நபர் தனது வருமானத்தில் பெரும்பகுதியை தனது மனைவிக்காக செலவிட்டார். மனைவி மிகவும் அழகாக இருப்பதற்காக அவர் கேட்டது எல்லாம் அவர் வாங்கி கொடுத்து வந்துள்ளராம். இதனால், அவர் சேமிப்பு எதுவும் இல்லாமல் இருந்துள்ளராம். வரும் சம்பளத்தில் மனைவிக்காக மட்டுமே செலவு செய்து வந்துள்ளராம்.

ஒரே இரவில் மனைவி எடுத்த முடிவு

இப்படியாக இருக்கும் நிலையில், அவரது அரசு வேலை பல்வேறு காரணங்களால் பறிபோனது. 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வேலையை இழந்த அவர், தற்போது டெலிவரி ஊழியராக பணிபுரிந்து 

வந்துள்ளராம். மாதத்திற்கு ரூ.1.23 லட்சம் மட்டுமே சம்பாதித்து வந்துள்ளார். முன்பு ரூ.6.23 லட்சம் வரை வருமானம் பெற்றிருந்த அவர், தற்போது வெறும் ரூ.1.23 லட்சம் வருமானத்தை ஈட்டு வருகிறார்.

இதனால், அந்த நபரால் தனது மனைவியின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. மேலும், அவரால் தனது செலவுகளையும் பார்த்துக் கொள்ள முடியவில்லை.  இதனால், அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து, விவாகரத்துக்கு கோரியுள்ளார்.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர் கூறுகையில், ”எனது வருமானம் குறைந்ததால், எனது மனைவி விவகாரத்து கோரியுள்ளார்.  அந்தப் பெண் வேலை செய்யவில்லை. எனது சம்பளத்தில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்தார்.  அவள் பெரும்பாலும் ஒரே மாதிரியான ஆடைகளை மூன்று வண்ணங்களில் வாங்கினாள். 

ஒவ்வொரு ஆடையின் விலை ரூ.1.87 லட்சம் வரை இருக்கும்.  அவள் கைகளிலும் கால்களிலும் கூட விலையுயர்ந்த கிரீம்களைப் பயன்படுத்தினாள்.  மெலிதாக இருக்க விலையுயர்ந்த சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொண்டாள். விலையுர்ந்த அழகுசாதன பொருட்களையும் பயன்படுத்தினாள். நான் மிகவும் நேசித்த பெண் அவள்தான். நான் அவளை மிகவும் ஆழமாக நேசித்ததால் அவளை ஒருபோதும் மறக்க மாட்டேன்.  அவள் என்னை நேசிக்கவில்லை. அவர் என்னுடைய பணத்தை தான் நேசித்தாள்" என சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

zeenews

 


Post a Comment

0 Comments