Ticker

6/recent/ticker-posts

ஆத்தோரம் காத்திருக்கேன்!


ஆத்தோரம் தோப்பு உண்டு 
ஆத்திலே நீரும் உண்டு 
ஆலோலம் பாடிக்கலாம் 
ஆனந்தமாய் நீராடிக்கலாம்.
வா மச்சான்  பூத்திருக்கேன் 
உன் வரவுக்காய்க் காத்திருக்கேன்.

ஆசவச்ச மாமன் பொண்ணு
ஆத்தாடி நீ சின்னப் பொண்ணு.
ஆனாலும் ஒம்மேல  கண்ணு 
ஆளான வாழத் தண்ணு.
மச்சான் தோளுக்கா பூத்திருக்கா?
யென் வரவுக்காக் காத்திருக்கா?

நடுசாமம் சொன்னேன் மச்சான்
நாளெல்லாம் ஒம்மேல ஆசை மச்சான்.
நாரெடுத்தேன் நானும் மச்சான் 
நாளு முளம் பூத் தொடுக்க 
நறுமணம் போச்சி மச்சான்.
காரணம் என்ன மச்சான்  
அட சொல்லு மச்சான்  
நீயும் சொல்லு மச்சான் .

நடுசாமம் பினாத்தினியோ ?
நாளெல்லாம் ஏங்கினியோ?
நாளுநாள் சேத்து வச்சையோ?
நாறும் வரை காக்க வச்சையோ?
நல்லாத்தான் கிறுக்கேறிப் போச்சி
காரணத்தச் சொல்லிப்புட்டேன்
விறுக்கென ஓடிரு நீயும் பச்சி. 
போட்டிடுவேன் ஒன்ன வெச்சி  வச்சி. 

ஆர் .எஸ் . கலா

 


Post a Comment

0 Comments