
அதிகப்படியான அரிசி சாப்பிடுவது இதய நோய், உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அரிசியில் உள்ள அதிக கார்போ ஹைட்ரேட்டுகள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
அரிசி நமது உணவில் முக்கிய உணவாகும். தோசை, இட்லி போன்ற உணவுகள் சிலருக்கு விருப்பமாக உள்ளது என்றாலும், சிலருக்கு சாதம் சாப்பிட்டால் மட்டுமே வயிறு நிரம்பிய உணர்வை பெறுகிறார்கள். ஆனால், அதிகப்படியாக அரிசி சாப்பிடுவது உங்களுக்கு இதய நோய் அபாயத்தை ஏற்படுத்தும்.
ஆனால் மிதமான அளவில் அரிசி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஆனால், அதற்கு நேர்மாறாக, அதை அதிகமாக சாப்பிடுவதும் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று சொல்லப்படுகிறது.
உலகில் அதிகம் உட்கொள்ளப்படும் உணவு அரிசி என்று சொல்லப்படுகிறது. ஆனால், அரிசியை பரிந்துரைக்கப்பட்ட அளவில் சாப்பிட வேண்டும். இல்லை என்றால் சிக்கல் ஏற்படும். ஏனென்றால் இது பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
அதிகப்படியான அரிசி சாப்பிடுவதால் உடல் பருமன் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அரிசியில் உள்ள இயற்கையான கார்போ ஹைட்ரேட்டுகளை அதிகமாக உட்கொள்வது உடலில் கொழுப்பு சேர வழிவகுக்கும்.
இது உடல் பருமன் மற்றும் பிற தொடர்புடைய உடல்நலப் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். அதிக அரிசியை சாப்பிடுவது நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
மேலும், அரிசியில் உள்ள கார்போ ஹைட்ரேட்டுகள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல. மேலும், அதிக அரிசியை சாப்பிடுவது இதய பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவையும் அதிகரிக்கும்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments