Ticker

6/recent/ticker-posts

"தைவான்மீது படையெடுத்தால் என்ன நடக்கும் என்று சீன அதிபருக்குத் தெரியும்": டிரம்ப்


தைவான்மீது படையெடுத்தால் சீனா எத்தகைய விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்பதைச் சீன அதிபர் சி சின்பிங் அறிவார் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

CBS செய்திக்கு அளித்த நேர்காணலில் திரு டிரம்ப் அவ்வாறு கூறினார்.

திரு சியைச் சென்ற வாரம் தென்கொரியாவில் சந்தித்தபோது இருவரும் தைவான் விவகாரத்தைப் பற்றிப் பேசவில்லை என்றார் திரு டிரம்ப்.

எனினும் தாம் அதிபராக இருக்கும்வரை சீனா தைவானைக் கைப்பற்றாது என்று திரு டிரம்ப் உறுதியாகச் சொன்னார்.

தைவானை அதன் சொந்த நிலப்பகுதியாகவே சீனா கருதுகிறது.

அதை எதிர்க்கும் அமெரிக்கா தைவான் தன்னைத் தற்காத்துக்கொள்ள ஆயுதங்களை அளித்துவருகிறது.

தைவானுக்கு ஆதரவளிக்கவேண்டாம் என்று சீனா பல முறை எச்சரித்துள்ளது.

seithi

 


Post a Comment

0 Comments