Ticker

6/recent/ticker-posts

டிரம்புக்கு எதிராக 'இறந்து கிடக்கும்’ போராட்டத்தில் ஈடுபட்ட தென்கொரிய இளைஞர்கள்.. என்ன காரணம் தெரியுமா?


தென் கொரியாவில் டிரம்புக்கு எதிராக இளைஞர்கள் ’இறந்து கிடக்கும்’ போராட்டத்தில் ஈடுபட்டனர்.

’அபெக்’ எனப்படும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் இரண்டு நாட்கள் மாநாடு தென்கொரியாவில் உள்ள கியோங்ஜு நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்தித்து பேசினார். இதில் வர்த்தக உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், மாநாட்டில் பங்கேற்காமல் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், கடுமையான விதிகளை விதித்து ’பொருளாதார போரை’ நிகழ்த்தி வருவதாகக் கூறி, டிரம்புக்கு எதிராக தென் கொரிய இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கியோங்ஜுவில் நடைபெற்ற போராட்டத்தில், முதலாளித்துவத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக சென்றனர். முதலாளித்துவத்தின் தீங்கை எடுத்துரைக்கும் வகையில் புல்வெளியில் இறந்து கிடப்பது போன்று போராட்டக்காரர்கள் நடித்துக் காட்டினர்.

news18

 


Post a Comment

0 Comments