Ticker

6/recent/ticker-posts

Ad Code



நலம் வாழ -மருத்துவப் பகுதி-1


சென்ற வார தொடர்ச்சியில் ஆரோக்கியம் என்றால் என்ன ஆரோக்கியத்தை எவ்வாறு பாதுகாப்பது ?என்பதை பற்றி வினா எழுப்பி இருந்தோம் அல்லவா?  எனவே அவற்றைப் பற்றி விரிவாக பார்க்கலாம். 

முதலில் ஆரோக்கியம் என்றால் என்ன என்பதை பற்றி  காணலாம். 

நாம் அனைவரும் உலகில் வாழ்வதற்கு அனைத்து வசதிகள் இருந்தாலும் அவற்றை அனுபவிப்பதற்கும் மிகத் தேவையான ஒன்று ஆரோக்கியம். நம்மிடத்தில் எத்தனை வசதிகள் இருந்தாலும் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க இயலாது. ஆனால், ஒன்றை மட்டும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நமது ஆரோக்கியம் நமது கையில் தான் உள்ளது .

ஆம்..!நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை மட்டும்  நமது கையில் இயற்கை கொடுத்துள்ளது. எப்பொழுது நாம் இயற்கைக்குப் புறம்பாகச் செயல்படுகின்றோமோ, அப்பொழுது இயற்கை கொடுக்கும் தண்டனை தான் ஆரோக்கியக் குறைவு. 

இது உலகில் உள்ள அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. 

ஆம், இன்று உலகில் ஏற்படும் அனைத்து வகையான கொடிய நோய்கள் தோன்றுவதற்கும் நமது இயற்கைக்குப் புறம்பான செயல்களே காரணம்.இவற்றை எவ்வாறு சரி செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம் .நமது உடலில் இயற்கையானது சூடு, குளிர்ச்சி இவை இரண்டையும் சரிசமமாக அமைத்துள்ளது.நமது உடலில் சூடு அதிகரிக்கும் பொழுதும் அல்லது குளிர்ச்சி அதிகரிக்கும் பொழுதும்,நமது உடலில் நோய் ஏற்படுகிறது.  


எவ்வாறு பகலில் சூரியன் உதிக்கின்றதோ, இரவில் நிலவு தோன்றுகின்றதோ அதுபோல, இது உலகின் இயக்கத்திற்கு மட்டுமல்ல நமது உடலிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஆம், உடல் இயக்கத்திற்குப் பகலில் உள்ள வெப்பம் தேவைப்படுகிறது. உடல் ஓய்வு பெறுவதற்கும் உடலில் உள்ள உள் உறுப்புகள் உள்ள கழிவு வெளியேறுவதற்கும் இரவு தேவைப்படுகிறது. 

இந்த இரண்டு செயல்பாடுகளும் சரிவர நடக்கும் பொழுதுதான் உடல் இயக்கம் செம்மையாக இருக்கும். ஏனெனில், உடல் என்பது இயந்திரத்திற்கு ஒப்பானது. மேலும் நமது உடல் பல பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றது. மேலும் நமது உடல் எனும் இயந்திரம் சரியாக இயக்க வேண்டும் எனில் அதை சரியாக பராமரிக்க வேண்டும். நமது உடல் எனும் இயந்திரத்தை எவ்வாறு செவ்வையாகப் பராமரித்து, ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது என்பதைப் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம் .
           
நலம் வாழ .என்றும் ஆரோக்கியத்துடன் ..வேட்டை வாசகர்களைச் 
சந்திக்கலாம் ...நலம் வாழ தொடருடன் ...(தொடரும்)

டாக்டர் ஃபர்ஜானா பாத்திமா M.D(Acu).

தொகுப்பு :
உங்கள் குறள் யோகி, 
தமிழ்ச் செம்மல், 
டாக்டர் மு.க.அன்வர் பாட்சா.



 

Post a Comment

0 Comments