
கேரளாவில் பேருந்தில் அத்துமீறியதாக கூறி வீடியோ வெளியானதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் கோழிக்கோடு வடகரா பகுதியில், 35 வயதான பெண் வழக்கறிஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
அதில்,பேருந்து பயணத்தின் போது நடுத்தர வயது நபர் ஒருவர் தவறான நோக்கத்தில் தன்னை தொட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த அந்த நபர், தன்னை பற்றிய சமூகவலைதளப் பதிவை கண்ட அதிர்ச்சியில் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், சமூகவலைதளங்களில் தான் பிரபலமாக வேண்டும், அது வைரலாக வேண்டும் என்ற நோக்கில் வேண்டுமென்றே இளம் பெண் செயல்பட்டதாக கடும் கண்டனங்கள் எழுந்தன.
தன் நீட்சியாக மரணமடைந்த நபர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாக இளம்பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்குள் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அம்மாநில மனித உரிமை ஆணையம் உத்தரிவிட்டுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments