
அமெரிக்காவின் மினியாபோலிஸில் (Minneapolis) குடிநுழைவு அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல்கள் அதிகரிக்கின்றன.
ஒரு பெண்ணைக் காரிலிருந்து தரதரவென குடிநுழைவு அதிகாரிகள் இழுத்துச்செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.
திருவாட்டி அலியா ரஹ்மான் உடற்குறையுள்ள அமெரிக்கர்.
மருத்துவச் சோதனைக்காகச் சென்றுகொண்டிருந்தபோது சம்பவம் நடந்தது.
அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். அங்கு மருத்துவச் சேவைகளும் வழங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
காணொளியில் அதிகாரி ஒருவர் திருவாட்டி ரஹ்மானின் கார் சன்னலை உடைப்பது தெரிகிறது. மற்ற அதிகாரிகள் அவருடைய இருக்கை வாரைத் துண்டித்து அவரை இழுத்துச் செல்வதும் பதிவாகியுள்ளது.
"நான் உடற்குறையுள்ளவர். அதனால் அதிகாரிகள் வந்தபோது எங்கேயும் நகரவில்லை," என்றார் அவர்.
"அவர் காரை ஓட்டிச்சென்றிருந்தால் குடிநுழைவு அதிகாரிகளைத் தாக்க முற்பட்டதாகக் காரணம் கூறி அதிகாரிகள் அவரைச் சுட்டுக் கொன்றிருக்கலாம்," என்று திருவாட்டி ரஹ்மானின் வழக்கறிஞர் சொன்னார்.
அமெரிக்காவின் தாயகப் பாதுகாப்புத் துறை, அதிகாரிகளைத் தற்காத்துப் பேசியுள்ளது. திருவாட்டி ரஹ்மான் ஒரு கிளர்ச்சியாளர் என்று அது கூறியது.
அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதைப் பற்றி அது எந்தத் தகவலும் வழங்கவில்லை.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments