
அல்லாஹ் அண்ட சராசரங்களைப் படைத்து,வானம், புவி ஆகியவற்றை அதற்குள் வடிவமைத்து, புவியிலே மலைகள், கடல், பயிரினம், விலங்கினம், காற்று, மழை, இடி, மின்னல் என்பவற்றை ஏற்படுத்தி, இவற்றையெல்லாம் பிரயோசனப்படுத்தி வாழ்வதற்காகவும், தன்னைச் சிரம் பணிந்து வணங்குவதற்காகவும் இறுதியாக மனிதனை உருவாக்கினான்!
அண்ட சராசரங்கள் 450 கோடி வருடங்களுக்கு முன் படைக்கப்பட்டதாகவும்,புவி படைக்கப்பட்டு 195 கோடி வருடங்களாவதாகவும் ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்!
புவி படைக்கப்பட்டதிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக 18 படைப்பினங்களை அல்லாஹ் படைத்து அவற்றைப் புவிப்பரப்பில் வாழ விட்டபோதிலும்,அவை காலத்துக்குக் காலம் இல்லாமற் போனதாக வரலாறுகள் குறிப்பிடுகின்றன!
அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிராணியொன்றின் எலும்புக்கூடொன்று 50 கோடி வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பிராணிகளை என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்!
முதல் மனிதன் படைக்கப்பட்டவுடனேயே மனித இனத்தை வழிகெடுப்பதற்கு ‘ஷைத்தான்’ அல்லாஹ்விடத்தில் வரம் வாங்கிக் கொண்டான்.
அப்போதுதான் மனித இனத்தை ஏனைய உயிரினங்களிலிருந்து மேம்படுத்துவதற்காக அல்லாஹ் மனிதனுக்குப் பகுத்தறிவைக் கொடுத்தான்!
ஷைத்தானின் வழியிலிருந்து விடுபட்டுக் கொள்ளவும், நன்மை, தீமைகளைப் பகுத்துணரவும் “பகுத்தறிவு” மனித இனத்திற்கு அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட பரிசாகும்!
ஐ.ஏ.ஸத்தார்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments