
பிலிப்பீன்ஸில் வீசிய கால்மேகி (Kalmaegi) சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் 40க்கும் அதிகமானோர் மாண்டனர்.
சிபூ (Cebu) தீவில் மட்டும் 39 பேர் மாண்டதாக அதிகாரிகள் AFP செய்தி நிறுவனத்திடம் கூறினர்.
"இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. சூறாவளியே அதிக ஆபத்தைக் கொண்டிருக்கும் என்று எண்ணினோம். ஆனால் மக்கள் நீரால்தான் ஆபத்தைச் சந்திக்கின்றனர்," என்று உள்ளூர் ஆளுநர் பமேலா பரிக்குவாட்ரோ (Pamela Baricuatro) சொன்னார்.
சிபூவைக் காட்டும் காணொளிகளில் வட்டாரங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதைக் காணமுடிகிறது.
நீரில் சிக்கியவர்களைக் காப்பாற்ற அதிகாரிகள் விரைகின்றனர்.
வெள்ளத்தில் கார்கள், லாரிகள், கொள்கலன்கள் ஆகியவை அடித்துச் செல்லப்படுவதையும் காணொளிகளில் பார்க்கமுடிகிறது.
கால்மேகி சூறாவளி வீசுவதற்கு முந்தைய நாளிலேயே 182 மில்லிமீட்டர் அளவில் மழை பதிவானது.
மாதத்துக்குச் சராசரியாகப் பெய்யும் மழையை விட அது மிகவும் அதிகம்.
சூறாவளி ஏற்பட்டபோது நிலைமை மோசமானது.
தண்ணீர் மட்டம் விரைவாக உயர்ந்ததில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதற்குச் சிரமப்பட்டனர்.
விசயஸ் (Visayas) தீவுக் கூட்டத்தைக் கடக்கும் காற்று தற்போது வலுவிழப்பதாக அதிகாரிகள் கூறினர்.
அது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகம் வரை வீசுகிறது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments