Ticker

6/recent/ticker-posts

Ad Code



நலம் வாழ -மருத்துவப் பகுதி-3

நொறுங்க தின்றால் நூறு வயது          

சென்ற வாரம் வாயில் செரிப்பது எப்படி? என்று கேட்டிருந்தோம் அல்லவா?

என்ன இது புதிய கதை கூறுகிறீர்கள் .நாம்  சாப்பிடும் உணவு வயிற்றில் தான் செரிமானம் ஆகும். அது எப்படி வாயில் செரிப்பது?
ஆம்., 

நமக்குப் பிடித்த உணவைப் பார்த்தவுடன் நமக்கு நாவில் எச்சில் ஊறுகிறது. அதே சமயம் நமக்குப் பிடிக்காத உணவைப் பார்த்தவுடன் பசி உணர்வு அடங்கிப் போகிறது. இவை இரண்டும் நமது மூளையில் ஏற்படும் உந்துதலாலும்  நமது வாயில் ஏற்படும் சுரப்பியின் மூலமாகவும் இந்த உணர்வு ஏற்படுகிறது.

நாவின் மேற்பரப்பில் பாபிலோக்கல்  உள்ளது ..இவற்றில் தான் சுவையை அறிய உதவும் சுவை அரும்புகள் உள்ளது .இவைதான் நீங்கள் உண்ணும் உணவின் சுவையை அறிய உதவி செய்கிறது.

இனிப்பு என்ற உடன் சாப்பிட வேண்டும் என்ற உணர்வும்., கசப்பு என்றவுடன் வேண்டாம் என்று சொல்வதும் இதனால் தான்.

 துவர்ப்பு என்றவுடன் என்ன சுவை என்று கேட்பவர்களும் உண்டு.உப்பு என்றவுடன் மாங்காயும், நெல்லிக்காயும் எங்கே ? என்று தேடுவதும், மசக்கை உள்ளவர்கள் புளிப்புச் சுவை அதிகமாக விரும்புவதும், நமது நாவில் உள்ள சுரப்பிகளால்தான்.


சரி சுவையை வைத்து என்ன செய்வது? வாயில் எப்படி செரிமானம் நடக்கிறது? என்று கேட்கிறீர்களா?

நமது உணர்வுக்கும், உள் உறுப்புகளுக்கும் , மிகுந்த தொடர்பு உள்ளது ...எப்படி இனிப்பு என்ற சுவை மண்ணீரலை பலப்படுத்துகிறதோ, துவர்ப்பு என்ற சுவை இரைப்பையைப் பலப்படுத்துகிறதோ, உப்பு சிறுநீரகத்தையும், காரம் நுரையீரலையும்,
கசப்பு இருதயத்தையும் பலப்படுத்துகிறது.

இவ்வாறு, ஒவ்வொரு சுவையும் ஒவ்வொரு உறுப்பைப் பலப்படுத்துகிறது.
 
அதனால் தான் சுவையறிந்து உண்ண வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். 

இதில் ஒவ்வொரு சுவையும் ஒவ்வொரு உறுப்புகளுடைய பலத்தையும், பலவீனத்தையும் நிர்ணயிக்கிறது. மேலும் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு உணர்வுகள் உள்ளன. அதேபோல் ஒவ்வொரு உணர்ச்சிகளும் உள்ளன.!!

என்ன!? உணர்ச்சிகளா!!
மனிதனே உணர்வற்ற நிலையில் ஜடமாய் வாழும் போது ஒவ்வொரு  உறுப்புகளுக்கும் உணர்ச்சியா.? என்று கேட்பது காதில் ஒலிக்கிறது.

 அதுதான் உண்மை ,சாப்பிடும் பொழுது கண்ணீர்  வருகிறது இல்லையா? பஜ்ஜியின் சுவையால் ஆனந்த கண்ணீரைக் கண்கள் வடிக்கின்றன.. 

சரி அடுத்த தொடரில் ஆனந்தக் கண்ணீர் ஏன் வருகிறது? துக்கம் ஏன்.?தொண்டையை அடைகிறது? என்று காணலாம் 
(தொடரும்)
டாக்டர் ஃபர்ஜானா பாத்திமா M.D(Acu).

தொகுப்பு :
உங்கள் குறள் யோகி, 
தமிழ்ச் செம்மல், 
டாக்டர் மு.க.அன்வர் பாட்சா.



 


Post a Comment

0 Comments