Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-108


பதில் கொடுத்த வேகத்திலே ஓடிச் சென்றார். முன் வாசல் வழியே குமரனின் தந்தையைக் கண்ட ஊர் மக்கள் "ஐயா வணக்கம்.என்னவாயிற்று ஏன்? இவர்கள் உங்களை அழைத்து வந்தார்கள் அய்யய்யோ எங்க குலசாமியை இந்தக் கோலத்தில் இம்புட்டுத் தூரம் கொண்டு வந்திருக்கார்களே.ஏனய்யா தம்பி குமரா ராசா  இங்கிட்டு வாப்பா ஏன் ஐயாவுக்கும் அம்மாவுக்கும் இப்படி ஒரு நிலமை ஐயா எங்களால் உங்களை இந்தக் கோலத்தில் பார்க்கவே முடியலையே உங்க கம்பீரம் எங்கே  நாட்டாமை அம்மையார் முகத்தைப் பார் இளே  சோர்ந்து போச்சே அம்மா ராணி அம்மா வணங்குகிறோம்."  .

ஏன் அம்மா எங்க ஐயாவை இப்படி அழைத்து வந்திங்க ஏதாவது தவறாச்சா?" இப்படி வந்த மக்கள் அனைவரும் ஆள் மாறி புலம்ப அவர்களை அடக்க முயன்ற குமரனின் தந்தை தோற்றுப் போய் ராணியைப் பார்த்தார்.

உடனே ராணி எழுந்து நின்று "சற்று அமைதியாகி விடுங்கள் உங்களில் ஒருத்தர் என் அருகே வாருங்கள்.என்ன பிரச்னை என்பதை தெளிவாகக் கூறுங்கள் ஏனையோர் அமைதியாக அமருங்கள்."என்று கூறி அமர்ந்தார்.

அப்போது  வந்தவர்களில் ஒருத்தன் முன் வந்தான்.அவன் வேறு யாரும் இல்லை நாட்டாமையின் எடுபிடி அவரின் நிழல் போன்று ஒட்டிக் கொண்டே இருப்பான்.நாட்டாமையின் விசுவாசி தன் உயிரின் மேலாக நாட்டாமையை மதிப்பவன் பேரோ குப்புசாமி மெதுவாக ராணி அருகே போய் தன்னை அறிமுகம் செய்தான். 

"எனது பெயர் குப்புசாமி.நான் நாட்டாமை வீட்டுக் கணக்குப்பிள்ளை எப்போதும் அவரோடு தான் இருப்பேன்.இன்று ஓர் அலுவலாக ஐயா என்னை அயல் ஊரு அனுப்பி விட்டார். திரும்பி வந்ததும் தாங்கள் ஐயாவையும் அம்மாவையும் சிறை பிடித்ததாகக் கூறி ஊரே சோகத்தில் இருந்துச்சு ராணியம்மா. அது தான் ஐயாவைப் பார்க்க நாங்கள் ஓடி வந்தோம் ஐயா குடும்பம் எங்க ஊருக்கே ஆலமரம்" .

"அவர்கள் யாருக்கும் கெடுதல் செய்ததே இல்லை. அம்மா ஐயாவோட பிள்ளை குமரன் தங்கமான பிள்ளை. ஊரையே நேசித்தவர். ஊருக்காகவே அவர் வைத்தியராக ஆனார். மனசு கிடந்து துடிச்சுது மா அதுதான் தாயி ஓடி வந்தோம்.குற்றம் எண்ணா மன்னிச்சுக்குங்க எங்க ஐயாவை எங்கக் கூட அனுப்பிடுங்க மா. உங்களைக் கை எடுத்துக் கும்பிடுகின்றோம்" எனக் கூறி அவன் கும்பிட பின்னால் இருந்தோரும் "ஆமாம் அம்மா" எனக் கூறி இணைந்தே கரம் தூக்கினார்கள். 

ஊர் மக்களின் பாசம் கண்டு கண்ணீர் பொங்க வாய் பொத்தி நின்றார்கள்.குமரன் குடும்பம் கூடி நின்றோர் அனைவருமே பிரமிப்போடு பார்த்தார்கள்.ராணி உட்பட ரொம்பவே ஆச்சரியப் பட்டு விட்டார்கள்.

'"இத்தனை  மக்களைக் கட்டிக் காட்கும் குடும்பமா? குமரன் குடும்பம் இவர்கள் நாட்டாமை பரம்பரையா? என்னால் நம்பவே முடியவில்லையே மந்திரியாரே" என மந்திரியைப் பார்த்து மெல்லிய குரலில் மகாராணி பேசினார் .

"ஆமாம் இளவரசே நானும் ஆச்சரியப் படுகிறேன் சந்தேகங்களைக் கேட்டே தெளிவு கொள்வோம் அதில் தவறில்லையே" என்றார் மந்திரி.

"அவை சரிதான்" என ராணி பதில் கொடுத்து விட்டு குமரனின் தந்தையைப் பார்த்துக் கேட்டார். 

"தாங்கள் நாட்டாமையா? இவர்கள் கூறுவது உண்மையா? இவை பற்றி குமரனோ நீங்களோ இது வரை கூறவில்லையே? அப்படி ஆனால் ஏன்? நீங்கள் அதற்கான எவ்வித அறிகுறியும் காட்டிக் கொள்ளவில்லை.உடையிலும் சரி, பேச்சிலும் சரி நான் மாற்றம் காணவில்லையே.ஏன்? அதை மறைத்தீர்கள் இத்தனை உள்ளம் உங்களை நேசிப்பதைப் பார்க்க நான் அமர்ந்திருக்கும் இருக்கையில் நீங்கள் இருப்பதாய்த் தோணுதே. பேசுங்கள் மௌனம் கொள்ளாமல் விளக்கமளியுங்கள்" என்றார் மகாராணி  குமரனின் தந்தையிடம்.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments