
"நம் ஐயாவைப் பற்றி நிறையவே கூறலாம்.அந்த அளவு ஊரை மாற்றி அமைத்து உள்ளார்.
இயற்கை செயற்கை இரண்டையுமே மென்மேலும் விரிவாக்கம் செய்துள்ளார்.
பெரிய ஐயா ஊரில் உள்ள குளத்தில் மீன் பிடிப்பதையும் அதற்கான தேவைகளையுமே செய்து கொடுத்தார்.
ஆனால் இவங்க மீன் இறால் வளர்ப்புத் திட்டத்தையே ஊருக்குள் கொண்டு வந்து விட்டார்.
அதையும் யாருக்காக எனத் தெரியுமா? வயது முதிர்ந்தோர் தாங்கள் உடல் வருத்தி உழைத்திட முடியாமல் மக்களின் கைகளை எதிர் பார்த்து கலங்கி நிற்பதை ஏதோ ஒரு சந்தப்பர்த்தில் அறிந்தமையால்.
அவர்கள் சுயமாக உழைத்து வாழ்ந்திடவும் மனதளவில் தெண்டச்சோறு நாம் என்று வருந்தாது மகிழ்ச்சியோடு கௌரவமாய் நடைபோடவும். முழுக்க முழுக்க முதியோரை மாத்திரம் அத்திட்டத்துக்குள் கொண்டு வந்தார்.
வாரம் ஒரு முறை மாத்திரம் தற்காலியமாக சில பணியாளர்கள் பிடித்து சுத்தம் செய்து விடுவது மற்றும் மீன் பராமரிப்பும் பிடித்து சந்தைக்கு அனுப்புவதும் பணத்தை என்னிடம் கணக்கிடுவதும் அனைத்தும் முதியோர் மாத்திரமே அவர்களும் உழைத்து உண்ணுவதால் முகத்தில் புன்னகை மலரும் தினம்.
அடுத்து மருத்துவ மனை எங்கள் கிராமம் இருந்து பல மையில் தூரம் நடையிலே பயணிக்க வேண்டும் .இதனால் பல உயிரும் பறி போய் இருக்கு சில நோயாளியும் மருந்தைத் தேடிப் போக விரும்பாமல் நோய்யின் பிடிக்குள்ளே இருக்கும் நிலையாச்சு.
அரசாங்கத்திடம் பல முறை கூறியும் மருத்துவ மனை கட்டவில்லை மாறாக மாதம் ஒரு முறை வந்து பரியோதித்து விட்டு மருந்து தருவார்கள். அவர்கள் வரும் நேரம் பார்த்தா? நோய் வரும்.
இதனால் ஐயாவே சிறு மருத்துவ மனை ஒன்றைக் கண்டினார் அதற்கு மருத்துவர் இல்லை ஏதோ அறைகுறை கைவைத்தியம் தெரிந்த பாட்டி மார் அதில் அமர்ந்திருப்பார்கள். வெத்தலையைப் போட்டு அங்கும் இங்கும் உமிழ்நீர் துப்பியவாறு.
இது சரி வராது ஒரு நிரந்தரமான மருத்துவரை வைத்திடுவோம் என்று பட்டணத்தில் தேடிப் பிடித்து சம்பளம் பற்றி எல்லாம் கூறிக் கொண்டு வைத்தால் மறு நாள் பாம்பைக் கண்டு ஓடி விட்டான் இவனா பாம்புக் கடிக்கு வைத்தியாம் செய்வது ஐயா அவனை அப்படியே விடுங்கள் என்று நாங்கள் அனைவரும் கூறினோம்.
அதை ஏற்றுக் கொண்ட ஐயா தானே முன் வந்தார் தனக்குத் தெரிந்த மூலிகை மருத்துவத்தை முதல் உதவியாக செய்வதென அன்று முதல் இன்று வரை காலை எட்டு மணியிலிருந்து ஒரு மணி வரை அங்குதான் இருப்பார்."
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments