Ticker

6/recent/ticker-posts

சவப்பெட்டியில் இருந்து வந்த சத்தம்! இறந்த பெண் மீண்டும் உயிருடன் வந்த அதிசயம்.


சினிமாவில் நடக்கும் விஷயங்கள் நேரடியாக நம் கண் முன்னே நடக்கும் போது அதை நம்ப நமக்கு சில நிமிடங்கள் தேவைப்படும் இல்லையா? அப்படிப்பட்ட சம்பவம் ஒன்றுதான் தற்போது தாய்லாந்தில் நடந்திருக்கிறது. இதில், இறந்ததாக நினைத்து புதைக்கப்பட்ட பெண், சில மணி நேரங்களில் உயிருடன் அந்த பெண் எழுந்ததாக கூறப்படுகிறது. 

இறந்ததாக புதைக்கப்பட்ட பெண்:

தாய்லாந்தில் உள்ள  பேங்காங்கில், ஒரு புத்தர் கோயில் உள்ளது. அங்கு, ஒரு பெண்ணின் சடலத்தை சவப்பெட்டியில் வைத்து, எடுத்து வந்துள்ளனர். அப்போது, அந்த கோயிலில் இருக்கும் முக்கிய நபர் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களிடம் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகளை கூறிக்கொண்டு இருந்திருக்கிறார். 

அந்த இடம் அமைதியாக இருந்ததால், திடீரென்று அந்த கோயில் நிர்வாகிக்கு ‘டொக் டொக்’ என கதவை தட்டுவது போல சத்தம் கேட்டிருக்கிறது. கதவருகில் சென்று பார்த்தால், யாருமே இல்லை. மீண்டும் உறவினர்களிடம் பேச தொடங்கி இருக்கிறார். பின்னர் மீண்டும், அதே சத்தம் கேட்டிருக்கிறது. இம்முறை, சவப்பெட்டியில் இருந்துதான் சத்தம் வருகிறது என்பதை அவர் தெரிந்து கொண்டார். 

திறந்து பார்த்தால்..

சவப்பெட்டிக்குள் இருந்து சத்தம் வந்ததை அடுத்து, அந்த நிர்வாகி சவப்பெட்டியை திறக்க சொல்லி கூறியிருக்கிறார். அதை பார்த்தால், உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண், கண்களை மெதுவாக திறந்து கொண்டு சவப்பெட்டியின் கதை தட்டுவது தெரிய வந்துள்ளது. அதை பார்க்கும் போது, அந்த பெண் மிக நீண்ட நேரமாக கதவை தட்டிக்கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

65 வயதான அந்த பெண், உயிரிழந்ததாக சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் உயிர் பிழைத்தது, அங்கிருந்த அனைவருக்கும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பின்னர், அந்த கோயில் நிர்வாகி உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியிருக்கிறார்.

அந்த பெண்ணுக்கு hypoglycaemia எனப்படும் குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த குறைபாடு இருப்பவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு மிகவும் குறையும். அப்படி குறையும் போது தலை சுற்றும், மயக்கம் வரும். 

அந்த பெண் உயிரிழந்து மீண்டும் வந்ததாக நம்பும் அவர்களின் உறவினர்கள் கூறியிருக்கும் தகவலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, அந்த பெண் கடந்த 2 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருப்பதாகவும் அவரது உடல் நிலை மிகவும் மோசமாகி மூச்சு நின்றதால் இறந்ததாக நினைத்ததாகவும் பேசியிருக்கின்றனர்.

அந்த பெண்ணிற்கு, மூச்சடைப்போ, நெஞ்சுவலி அல்லது மாரடைப்போ ஏற்படவில்லை என்றும் மருத்துவர் தெரிவித்திருக்கிறார். இந்த பெண் இறந்து விட்டதாக நினைத்து, அவருக்கு இறுதி சடங்குகளை செய்வதற்காக அவரது குடும்பத்தினர், கிட்டத்தட்ட 500 கி.மீ தொலைவில் இருந்து இந்த புத்தர் கோயிலுக்கு வந்து, மீண்டும் அந்த பெண்ணுடனே திரும்ப சென்றுள்ளனர்.

zeenews


 


Post a Comment

0 Comments