Ticker

6/recent/ticker-posts

கிங் கோலி அவங்க எல்லாரையும் சைலன்ட் பண்ணிட்டாரு.. நேரலையில் அகர்கர், கம்பீரை செஞ்சு விட்ட சாஸ்திரி


ராஞ்சியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 50 ஓவர்களில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 349/8 ரன்கள் குவித்தது.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதத்தை அடித்து 135 (120) ரன்கள் விளாசி அசத்தினார். அவருடன் 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரோஹித் சர்மா அரை சதம் அடித்து 57 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் கேப்டன் கேஎல் ராகுல் 60, ரவீந்திர ஜடேஜா 35 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு கை கொடுத்தனர்.

முன்னதாக கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக விளையாடி வரும் விராட் கோலி, ரோஹித் சர்மா இந்திய அணியின் நிறைய மகத்தான வெற்றிகளில் பங்காற்றியுள்ளனர். ஏற்கனவே வயது காரணமாக வருங்கால வீரர்களுக்கு வழி விட்ட அவர்கள் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டனர். இறுதியாக ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடை பெற விரும்புகின்றனர்.

ஆனால் அதற்குள் அவர்களை கழற்றி விட தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் முயற்சித்து வருகிறார்கள். அதன் காரணமாகவே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற பின்பும் ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு சுப்மன் கில்லை புதிய கேப்டனாக நியமித்தது. ஆனால் அதற்காக அசராத ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் கடந்த ஆஸ்திரேலியா தொடரில் சிட்னி போட்டியில் 121*, 74* ரன்கள் அடித்து அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

அதே போல இப்போட்டியிலும் அவர்கள் பெரிய ரன்கள் குவித்து தங்களுடைய தரத்தை மீண்டும் காண்பித்துள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் அகர்கர், கம்பீர் உட்பட தம்மைக் கழற்றி விடத் துடிக்கும் அனைவரையும் விராட் கோலி அமைதியாகியுள்ளதாக ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். இது பற்றி விராட் கோலி சதத்தை கொண்டாடும் போது நேரலையில் அகர்கர், கம்பீரை செய்து விடும் வகையில் சாஸ்திரி வர்ணித்தது பின்வருமாறு.

“இது 52வது சதம். அதை பவுண்டரியுடன் பெற்றுள்ளார். மகிழ்ச்சியுடன் காற்றில் குத்துகிறார். இது நீண்ட காத்திருப்பு. தற்போது இந்த ஃபார்மெட்டில் மட்டுமே விளையாடும் அவர் நிறைய மக்களை சைலன்ட் செய்துள்ளார். இது இம்மைதானத்தில் அவருடைய 3வது சதம். இது அவரிடம் இருந்து சிறப்பான இன்னிங்ஸ். அந்த ஷாட்டில் அவரது டைமிங் அற்புதமாக இருந்தது” என்று கூறினார்.

crictamil

 


Post a Comment

0 Comments