Ticker

6/recent/ticker-posts

Ad Code



நலம் வாழ -மருத்துவப் பகுதி -28

நலம் வாழ 
தொடரின் மூலமாக வேட்டை வாசகர்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

ஆரோக்கியம் என்ற வார்த்தையை கேட்டவுடன் நமது உள்ளத்தில் ஒரு பூரிப்பு  ஏற்படுகிறது.ஏனெனில் இன்று ஆரோக்கியக் குறைவு நோய் நலமின்மை என்ற வார்த்தையை தான் அடிக்கடி கேட்க முடிகிறது. 

 

இந்த நூற்றாண்டில் ஆரோக்கியம் இன்மை நம்மைச் சுற்றி சுற்றிக்கொண்டே இருக்கிறது.

எனவே தான் ஆரோக்கியம் என்று தொடரின் மூலமாக ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தொடராக நமது உடல் நலத்தை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு கட்டுரைகளை பார்த்து வருகின்றோம்.

இதில் நாம் நோய் காண மூல காரணங்களை குறித்து அலசி ஆராய்ந்து வருகின்றோம்.

நோய்க்கான மூல காரணங்களில் ஒன்று மலச்சிக்கல் என்றும் அதை எவ்வாறு சரிப்படுத்துவது என்றும் பார்த்தோம்.

சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை  இந்த பிரச்சனைக்கு ஆட்படாதவர்களே யாரும் கிடையாது. 

இந்த வாரம் அஜீரணம் மற்றும் வாயு கோளாறு பற்றி நாம் பார்க்கலாம். 
இதைப் பார்ப்பதற்கு முன்பு நமக்கு எவ்வாறு ஜீரணம் நடைபெறுகிறது என்பதை தெரிந்தால்தான் ஏன் நமக்கு அஜீரணக் கோளாறு மற்றும் வாயு தொந்தரவு ஏற்படுகிறது என்ற காரணம் புரியும்.

நாம் சாப்பிடக்கூடிய உணவு வாயிலிருந்து உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. இரைப்பையை அடைந்த உணவு அமிலங்கள் மூலமாக பித்தநீர் மற்றும் கணைய நீர் இவை இரண்டும் கலந்து உணவை கரைத்து சிறுகுடலுக்கு சிறிது சிறிதாக அனுப்புகிறது. சிறிது சிறிதாக செல்லக்கூடிய காயம் என்ற உணவானது சிறுகுடலின் வில்லைகள் எனக்கூடிய  விரலிகள் மூலமாக சத்துக்கள் உறிஞ்சப்பட்டு அதனுடைய கழிவுகள் மொத்தமாக மலக்குடலில் பெரிஸ்டாலிஸ் என்ற இயக்கத்தின் மூலமாக மலக்குடலுக்கு தள்ளப்படுகின்றது. இந்த செயல்பாடு நடப்பதற்கு மூன்று முதல் நான்கு மணி நேரங்கள் ஆகின்றது. இதுதான் சுருக்கமான ஜீரணம் நடைபெறும் செயல்பாடு.

சரி இதில் எங்கே பிரச்சனை தோன்றுகிறது 


ஜீரணத்தில் நமது வாய் மிக முக்கிய பங்காற்றுகின்றது. இவ்வாறெனில் நீங்கள் உண்ணக்கூடிய உணவை துகள்களாக அரைத்து உமிழ்நீருடன் கலந்து ஜீரணத்தை எளிதாக செய்யக்கூடிய பதத்திற்கு மாற்றுகின்றது நமது வாய்.

இரண்டாவது கூல் போன்ற நன்கு அரைக்கப்பட்ட உணவு குழாயில் சென்று இரைப்பையை அடைகிறது இரைப்பையில் இருக்கும் உணவானது வலது பக்கத்தில் இருக்கக்கூடிய பித்த நீர்மற்றும் இடது பக்கத்தில் இருக்கக்கூடிய கணைய நீர் இன்சுலின் இரண்டும் கலக்கும் பொழுது அதனுடைய முழுமையான வடிவத்தில் செரிக்கும் ஆற்றலை பெறுகிறது.

இப்பொழுது இந்த இரண்டு பாகங்களாக பிரித்து இருக்கக்கூடிய செயல்பாடுகளில் ஏதாவது குறைவு ஏற்படும் பொழுது அஜீரணம் மற்றும் வாயு கோளாறுகள் ஏற்படுகிறது.


இதில் பங்கெடுக்கக்கூடிய அமிலங்கள் பற்றியும், வாயுக்கள் பற்றியும் அடுத்த வாரத் தொடரில் நாம் விரிவாக காணலாம். வேட்டை வாசகர்களே 

மேலும் பல தகவல்களுடன் உங்களுக்காக உங்களுடன் அடுத்த வாரம்  சந்திக்க உங்களுடன் உங்களுக்காக. .

டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).  



 



Post a Comment

0 Comments