Ticker

6/recent/ticker-posts

எகிறிய எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு... எவ்வளவு தெரியுமா? உலகில் இதுவே முதல்முறை!


டெஸ்லா, SpaceX, X உள்ளிட்ட பல நிறுனவங்களை கைகளில் வைத்திருப்பவரும், உலகின் டாப் பில்லியனருமான எலான் மஸ்க் குறித்த பரபரப்பான செய்திகள் கடந்த சில நாள்களாக வந்துகொண்டே இருக்கின்றன.

சொத்து மதிப்பில் திடீர் ஏற்றம் 

குறிப்பாக, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு அபரிமிதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 16ஆம் தேதி நிலவரப்படி, எலான்ஸ் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 600 பில்லியன் அமெரிக்க டாலராகும் (ரூ.54 லட்சம் கோடி) டெலாவேர் உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி அளித்த உத்தரவுக்கு பின்னரே எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு பெரும் சீற்றத்தை கண்டிருக்கிறது.  இந்த உத்தரவின் மூலம் எலான் மஸக்கிற்கு டெஸ்லாவில் ஊதியத் தொகுப்பு 139 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதற்கு முன் 56 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகின் முதல் நபர்... 

டிசம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி, எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 749 பில்லியன் அமெரிக்க டாலராகும்  (ரூ.67.18 லட்சம் கோடி). 750 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் அதிக சொத்துகளை சேர்த்த உலகின் முதல் நபர் என்ற பெருமையை எலான் மஸ்க் சம்பாதித்துள்ளார். எலான் மஸ்கின் சொத்து, இந்தியாவின் முதல் 40 கோடீஸ்வரர்களின் சொத்துகளின் மதிப்புக்கு சமமாகும். அதுமட்டுமின்றி, உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் எலான் மஸ்க்கிற்கு அடுத்திருக்கும் மூன்று பேர் ஒப்பீட்டளவில் சொத்து மதிப்பை மிகவும் குறைவாக வைத்திருக்கிறார்கள்.

பின்தங்கியிருக்கும் பிற கோடீஸ்வரர்கள்

அமெரிக்க தொழிலதிபரும், முன்னாள் கூகுள் சிஇஓ-வான லாரி பேஜ் சொத்து மதிப்பு 252.6 பில்லியன் அமெரிக்க டாலராகவும், ஆரக்கிள் (Oracle) நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி லாரி எல்லிசனின் சொத்து மதிப்பு ரூ.242.7 பில்லியன் அமெரிக்க டாலராகும், அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஜெஃப் பெஸாஸின் சொத்து மதிப்பு 239.4 பில்லியன் அமெரிக்க டாலராகும். உலகத்தின் டாப் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இவர்கள் முறையே 2வது, 3வது, 4வது இடத்தில் உள்ளனர். முதலிடத்தில் இருக்கும் மஸ்க் சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதிகமான சொத்தை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க் சொத்து விவரம்

2018ஆம் ஆண்டில் டெஸ்லா நிறுவனத்தில் எலான் மஸ்கின் பங்கு 56 பில்லியன்  அமெரிக்க டாலராக இருந்தது. 2024ஆம் ஆண்டில் கீழமை நீதிமன்றம் இதனை ரத்து செய்திருந்தது. தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின்படி அவருக்கு மீண்டும் அந்த பங்கு கிடைக்கும். எலான் மஸ்க்கின், பங்கு தற்போது 139 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதனால் அவரது சொத்து மதிப்பு 700 பில்லியனை தாண்டியிருக்கிறது.

எலான் மஸ்க் சொத்து மதிப்பு நான்கு நாள்கள் இடைவெளியில் மட்டும் 150 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு (ரூ.13.46 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. தற்போது 749 பில்லியன் அமெரிக்க டாலராக  (ரூ.67.18 லட்சம் கோடி) உள்ளது. பாகிஸ்தான், இலங்கை, நேபால் ஆகிய மூன்று நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் சேர்த்தால் கூட எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு நிகராகாது. மேற்கூறிய மூன்று நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் சேர்த்தால் 555 பில்லியன் அமெரிக்க டாலர்களே வரும். 

உலகின் 170 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை காட்டிலும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு அதிகமாகும். ஆப்பிரிக்க நாடுகள், லத்தின் அமெரிக்க நாடுகள், ஒரு சில ஆசிய நாடுகள் மட்டுமே இவரின் சொத்து மதிப்பை விட குறைவான மொத்த உள்நாட்டு உற்பத்தியை கொண்டுள்ளன. அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, இந்தியா உள்ளிட்டவை எலான் மஸ்கை தாண்டியே இருக்கிறார்கள்.

zeenews

 


Post a Comment

0 Comments