
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாய்லாந்தும், கம்போடியாவும் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.
தாய்லாந்து நாட்டின் சுரீன் மாகாணத்தில் உள்ள பிரசாத் தா மோன் தோம் கோயிலுக்கு அண்டை நாடான கம்போடியா சொந்தம் கொண்டாடி வருவதால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் இரு நாடுகளிடையே சண்டை மூண்ட நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில், தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்டுள்ளன. தாய்லாந்து எல்லைப் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கம்போடியா திடீரென தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. இதற்கு பதிலடியாக தாய்லாந்து ராணுவம் கம்போடியா மீது போர் விமானங்களை கொண்டு குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
தாய்லாந்து நாட்டின் உபோன் ராட்சதானி(Ubon Ratchathani) மாகாணத்திற்குட்பட்ட இரண்டு இடங்களில் இரு நாட்டு படைகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த தாக்குதலில் தாய்லாந்து வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்து - கம்போடியா இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இரு நாட்டு எல்லைப் பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். தாய்லாந்தின் புரிராம் பகுதியில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஒரு சிலர் வளர்ப்பு பிராணிகளுடன் ராட்சத சிமெண்ட் குழாய்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments