
மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில்தான், இந்த சம்பவமானது நடந்திருக்கிறது. இங்கு, ஒரு 16 வயது சிறுமி, தனது மாமா முறை உறவினரால் ரயிலில் இருந்து கீழே தள்ளி கொல்லப்பட்டிருக்கிறார். இதற்கான காரணம் என்ன? அந்த சிறுமிக்கும், உறவினருக்கும் எழுந்த மோதல் என்ன? இது குறித்த விரிவான விவரம், இதோ!
திருமணம் செய்ய சொல்லி டார்ச்சர் செய்த சிறுமி?
மகாராஷ்டிராவின் பஹல்கார் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து 16 வயதான கோமல் சோனார் என்கிற சிறுமி கீழே தள்ளி கொல்லப்பட்டிருக்கிறார். இவரை தள்ளி விட்டது, அவரது 28 வயதான மாமன் முறை உறவினர் அர்ஜுன் சோனி எனும் நபர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோமல் சோனர், மும்பையில் உள்ள மான்குர்த் எனும் பகுதியை சேந்தவர். இவருக்கும், மேலே குறிப்பிட்ட அர்ஜுன் சோனிக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும், கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
அர்ஜுனை திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்த கோமல், ஒரு வாரத்திற்கு முன்பு அவரது வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். பின்பு, வசாயில் தங்கியிருக்கும் அர்ஜுனின் வீட்டிற்கு சென்ற இவர், அவருடனேயே தங்க தொடங்கியதாக தெரிகிறது. இதன் பின்னர், அவரிடம் எதுவும் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கோமலின் தாயார், அர்ஜுன் தன் மகளை கடத்தியதாக போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
ரயிலில் இருந்து கீழே தள்ளிய வாலிபர்..
அர்ஜுன் மீது சிறுமியை கடத்தியதாக வழக்கு பதியப்பட்டதை அடுத்து, இவரும் கோமலும், பயந்தரில் இருந்து நாலா சபோரா செல்லும் லோக்கல் ரயிலில் பயணித்ததாக தெரிகிறது. அப்போது கோமலை, ஓடும் ரயிலில் இருந்து அர்ஜுன் கீழே தள்ளியிருக்கிறார். இதனால், கோமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
நடந்த சம்பவம் அனைத்தையும் நந்து ஷா என்கிற நபர் நேரில் பார்த்திருக்கிறார். அர்ஜுனை அருகில் இருந்த ரயில் பயணிகள் அடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து, அர்ஜுன் விசாரணைக்காக நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். விசாரணையில், தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி, கோமல் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அர்ஜுன் அவரை கீழே பிடித்து தள்ளியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்த வழக்கு விசாரணையில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments