
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் (Donald Trump) இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூவும் (Benjamin Netanyahu) சந்தித்திருக்கின்றனர்.
காஸா சண்டைநிறுத்தத்தின் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறுவதைப் பற்றிப் பேசுவதற்காகத் திரு நெட்டன்யாஹு அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்குச் சென்றிருக்கிறார்.
திரு நெட்டன்யாஹுவுடன் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு டிரம்ப், ஈரான் அதன் அணுசக்தி வசதிகளை மறுசீரமைத்தால் அமெரிக்கா அவற்றை இடித்துத் தள்ளும் என்று மிரட்டினார்.
இருதரப்புச் சந்திப்பின்போது காஸா உட்பட ஐந்து முக்கிய தலைப்புகளில் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
இஸ்ரேல் அதன் தரப்பு உடன்பாட்டை நிறைவேற்றிவிட்டதாக அவர் சொன்னார்.
சண்டைநிறுத்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக ஹமாஸ் கிளர்ச்சிக் குழு ஆயுதக் களைவை மேற்கொள்ளவேண்டும் என்று திரு டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.
இல்லையென்றால் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்தார்.
ஆயுதங்களைத் தொடர்ந்து வைத்திருக்கப்போவதாக ஹமாஸ் முன்னதாகக் கூறியிருந்தது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments