Ticker

6/recent/ticker-posts

மஹிந்த மீண்டும் அரசியலுக்கு...!


அரசியலில் ஓய்வு பெற்று உத்தியோகபூர்வ இல்லத்தை அரசிடம் கையளித்து, தங்காலை கால்டன் வீட்டுக்கு குடியிருப்புக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அரசியலில் பிரவேசிக்க உள்ளதாக காதோடு காதாக காற்றில் கலந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் கொழும்பின் புறநகர் பகுதி ஒன்றின் வீடொண்றுக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள்,அங்கு நடந்த மத  அனுஷ்டானங்களில் கலந்துகொண்டு, பால் பொங்க வைத்து தனது வரவை ஆரம்பித்தார் எனவும் தெரிய வருகின்றது.

அதிகரித்து வரும் அனுரவின் ஆதரவுக்கு சவாலாக முகம் கொடுக்க நாமல் ராஜபக்ஷ அவர்களால்  முடியுமா என்ற நிலையில்,2029 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் நாமல் ராஜபக்ச அவரின் வெற்றிக்கான ஆதரவைத் திரட்டும் முயற்சியாகும் இது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேருவளை ஹில்மி 

 


Post a Comment

0 Comments