
சமீபத்திய சைக்கிளோன் 'டிட்வா' மற்றும் அதன் தொடர்ச்சியான கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற பேரழிவுகளால் கண்டி மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் 20 நீர் வழங்கல் அமைப்புக்கள் செயலிழந்து போயின.
அவற்றுள் 18 அமைப்புக்கள் சீராக்கப்பட்டுள்ளதாக வாரியம் அறிவித்துள்ளது.
அனர்த்தம் காரணமாக, கண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பம்பிங் ஸ்டேஷன்களும் முழுமையாக செயலிழந்தன.
இதன் விளைவாக, மாவட்டம் முழுவதும் நீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தேசிய அளவில், 150க்கும் மேற்பட்ட நீர் அமைப்புக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கண்டி மாவட்டத்தில் அதிக சேதங்கள் ஏற்பட்டதால், நீர் வழங்கல் வாரியம், 2025 நவம்பர் மாதம் முதல் தீவிரமான மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், இப்போது 18 அமைப்புக்கள் இயல்பு நிலைக்கு வந்துள்ளதாக வாரியம் அறிவித்துள்ளது.
தற்காலிக பம்புகள், மின்சார மீட்பு, சுத்திகரிப்பு செயல்முறைகள் மற்றும் குழாய் பழுதுகளை சரிசெய்யும் பணிகள் அடங்களாக படை வீரர்களின் உதவியுடன் இந்த 18 அமைப்புக்களின் திருத்தப் பணிகள் விரைவாக முடிவுற்றதாக அறிய முடிகின்றது.
சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி
மீதமுள்ள இரண்டு நீர் வழங்கல் அமைப்புக்களாக மிகவும் சேதமடைந்த மற்றும் இன்னும் முழுமையாக சீராக்கப்படாத மீவத்துரை மற்றும் நில்லம்ப அமைப்புக்கள் என அறிய முடிகின்றது.
சைக்கிளோன் டிட்வா'வினால் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இவ்வமைப்புக்கள் இரண்டும் முழுமையாக மூழ்கி, மின்சார அமைப்புகள், பம்புகள் மற்றும் சுத்திகரிப்பு உபகரணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் சீரமைக்கும் பணிகள் தாமதமாவதாக அறிய முடிகின்றது.
கண்டி மாவட்டத்தின் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் மீவத்துரை அமைப்பு, பிலிமத்தலாவ மற்றும் கெலிஓயா பகுதிகளுக்கு நீர் வழங்கின்ற நிலையில், நில்லம்ப அமைப்பானது வெலிகல்ல, போத்தலாப்பிடிய பகுதிகளுக்கு நீர் வழங்கும் அமைப்புக்களாகும்.
இவ்வமைப்புக்கள் இரண்டும் எப்போது சீரமைக்கப்படும், எப்போது தங்கள் குழாய்களில் நீர் வரும் என்று 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் மக்கள் எதிர்பார்த்து, ஏங்கித் தவிக்கின்றனர்.
சீர்படுத்தப்பட வேண்டிய மீதமுள்ள இரண்டு அமைப்புகளும் மிகவும் பாதிக்கப்பட்ட பெரிய சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பம்பிங் ஸ்டேஷன்களைக் கொண்டுள்ளதாகவும், சேதம் அதிகமானதால் முழு மின்னணு அமைப்புகள் மற்றும் உளியல் சேதங்களைப் பரிசோதித்து, புதிய உபகரணங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அறிய முடிகின்றது.
இவை விரைவில் மீட்புப் பெறும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவிக்கின்றது.
இப்போது, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், பேரழிவு முகாமை மையம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து, தற்காலிக நீர் டேங்கர்கள் மற்றும் போர்டபிள் சுத்திகரிப்பு அலகுகளைப் பயன்படுத்தி இப்பகுதி மக்களுக்கு நீர் வழங்கி வருகின்றது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், இனி வரும் பேரழிவுகளுக்கு எதிராக நீர் அமைப்புகளை உயர்த்தி அமைக்கவும், ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments