
ஷார்ஜாவில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் பணியாற்றும் இமாம்கள், முஅத்தின்கள் இனி அரசு ஊழியர்களாக கருதப்படுவார்கள் என்று அமீரகத்தின் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும், ஷார்ஜா ஆட்சியாளருமான மாண்புமிகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்களின் உத்தரவின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முடிவின் மூலம், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும்
பதவி உயர்வு, ஊதிய சலுகைகள், காப்பீடு திட்டங்கள், வேலை பாதுகாப்பு, பிற நலத்திட்டங்கள் இமாம்கள், முஅத்தின்களுக்கும் வழங்கப்படும்.
மேலும், பணிச்சுமை காரணமாக விடுமுறை எடுக்க முடியாத சூழலில்,
அவர்களுக்கு மாற்று விடுப்பு வழங்கப்படும்.
அல்லது இஸ்லாமிய விவகாரத் துறையுடன் ஒருங்கிணைத்து விடுப்பிற்கான சமமான ரொக்க இழப்பீடும் வழங்கப்படும்.
இந்த அறிவிப்பு,
பள்ளிவாசல்களில் சேவை செய்து வரும் இமாம்கள், முஅத்தின்களின்
முக்கியத்துவத்தையும், அவர்களின் தியாக சேவையையும் அங்கீகரிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவு என்று உலமாக்கள் வரவேற்றுள்ளனர்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments