Ticker

6/recent/ticker-posts

இம்ரான் கானைச் சந்திக்கத் தடை! அதியாலா சிறை வாசலில் சகோதரிகள் திடீர் போராட்டம்!


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ள அதியாலா சிறையில், அவரைச் சந்திக்கச் சென்ற பிடிஐ கட்சித் தலைவர்கள் மற்றும் அவரது சகோதரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்  கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் இம்ரான் கானின் சகோதரிகளான அலீமா கான் மற்றும் உஸ்மா கான் ஆகியோர் அதியாலா சிறையில் அவரைச் சந்திக்கச் சென்றனர். ஆனால், சிறை நிர்வாகம் அவர்களைச் சந்திக்க அனுமதிக்கவில்லை.

அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இம்ரான் கானின் சகோதரிகள் மற்றும் பிடிஐ தலைவர்கள் சிறை வாசலிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் அவரது பாதுகாப்பு குறித்து தங்களுக்கு அச்சம் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

நீதிமன்றம் அனுமதி அளித்த பின்னரும், சிறை அதிகாரிகள் வேண்டுமென்றே இம்ரான் கானை தனிமைப்படுத்துவதாகவும், அடிப்படை உரிமைகளை மறுப்பதாகவும் பிடிஐ தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இம்ரான் கான் தொடர்ந்து சிறையில் இருப்பதும், அவரைச் சந்திக்கத் தடை விதிக்கப்படுவதும் அந்நாட்டில் அரசியல் கொந்தளிப்பை அதிகப்படுத்தியுள்ளது.

news18

 


Post a Comment

0 Comments