Ticker

6/recent/ticker-posts

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய விசாரணைகள் ஆரம்பம் – நீதி அமைச்சர் தெரிவிப்பு


வலிந்து காணாமலாக்கப்பட்டர்கள் பற்றிய முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணைகள் இந்த வருடத்தில் ஆரம்பத்திலேயே முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் (01) நீதி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாம் கடந்து வந்த பாதையை நேர்மையாக திரும்பிப் பார்க்க வேண்டும் என்றும், நாடாக நாம் எப்படி முன்னேற வேண்டும் என அமைதியாக முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

lankatruth

 


Post a Comment

0 Comments