
பாகிஸ்தான் அணிக்கு எதிரான (11) மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
தம்புள்ளையில் இந்தப் போட்டி நேற்று(11) 7 மணிக்கு ஆரம்பமாக இருந்த நிலையில் அங்கு தொடர்ந்தும் பெய்த மழை காரணமாக போட்டி ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் குறித்தப் போட்டியானது மழை காரணமாக 12 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 12 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் தசுன் சானக்க 5 சிக்ஸர்களை அதிரடியாக விளாசி 9 பந்துகளில் 34 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 ஓவர்கள் பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதன்மூலம் 3 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரை 1க்கு 1 என்ற அடிப்படையில் தொடரை இலங்கை அணி சமன் செய்துள்ளது.
tamilwin

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments