
நாக்பூரில் இன்று(21) நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்துக்கிடையிலான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
நாயணசுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இந்தியா முதலில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 238 ஓட்டங்கள் குவித்தது.
ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கிய அபிஷேக் சர்மா சிக்சர், பவுண்டரிகளாக அடித்து 35 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 84 ஓட்டங்கள் குவித்தார்.
கடைசி கட்டத்தில் இறங்கிய ரிங்கு சிங் 20 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 44 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 239 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.
கிளென் பிலிப்ஸ் தனி ஆளாகப் போராடி 40 பந்தில் 78 ஓட்டங்கள் குவித்தார். மார்க் சாப்மேன் 39 ஓட்டங்கள் எடுத்தார். 4வது விக்கெட்டுக்கு பிலிப்ஸ்-சாப்மேன் ஜோடி 79 ஓட்டங்கள் சேர்த்தது.
கடைசி கட்டத்தில் டேரில் மிட்செல் 28 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 190 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா தரப்பில் அந்த அணியின் வருண் சக்ரவர்த்தி, ஷிவம் துபே அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்மூலம் 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி நாளை மறுதினம்(23) ராய்ப்பூரில் நடைபெற உள்ளது.
tamilwin

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments