
அப்படி என்ன? சொல்லி இருப்பான் குமரன் இதோ அவன் கூறியவை ) அரசே நான் ராஜகுமாரியை நலம் பெறச் செய்தமையால் நீங்கள் எல்லோரும் திறமையான வைத்தியர் என்னும் கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் அப்படித்தானே?
இதுவே ராஜகுமாரி என் வைத்தியத்தில் நலமாக வில்லை என்றால் தாங்கள் என்ன செய்து இருப்பீர்கள் இதோ இங்கே அமர்ந்துள்ள என் சக நண்பர்களான இவர்களில் ஒருத்தரைத் தானே அழைத்திருப்பீர்கள்.
அதற்கு நான் வாய்ப்புகள் கொடுக்காமல் என் கணிப்பு சரியாக அமைந்ததால் ராஜகுமாரியை நலம் பெற்று வரும் சூட்சுமமான வைத்தியத்தைக் கையாண்டு தங்களின் மகளை நோயின் பிடியில் இருந்து மீட்டு விட்டேன்.
நான் அதை தவற விட்டு இருந்தால் அந்த வாய்ப்புகள் இவர்களில் யாரோ ஒருத்தர் கை மாறி இருந்திருக்கும் பொறுப்புக் கொடுக்கவில்லை அவர்களின் திறமை வெளியாகவில்லை.
ஆகையால் இவர்களும் திறமை
உள்ள வைத்தியர்களே தான் அரசே நீங்கள் ஏதோ ஒரு வழியைப் பயன் படுத்தி இவர்களுக்குப் பரீட்சை வைத்துப் பாருங்கள் உங்களுக்கும் இவர்கள் மேல் நம்பிக்கை இருந்தால் எனக்காகக் கொடுத்த பதவியையும் பணிகளையும் அவர்களுக்கே கொடுத்து விடுங்கள் அரசே என குமரன் கூறி கரம் தூக்கி நின்றான்.
ஆச்சரியம் கொண்டார் இளவரசி
அட நல்ல ஆலோசனையும் நிபந்தனையும் நான் இதை எதிர் பார்க்கவே இல்லை திறமை யாரிடம் இருந்தாலும் வரவேற்பதுதானே நல்ல ஆட்சிக்கு அழகு அன்னையே நாம் இதை ஏற்றுக் கொண்டு இவர்களைப் பரிட்சிப்போம் என்றார் ராஜகுமாரி.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments