Ticker

6/recent/ticker-posts

குஜராத்தில் மது விருந்து கொண்டாட்டம்... கும்மாளம் அடித்த 38 பெண்கள் கைது... பண்ணை வீட்டில் நடந்தது என்ன...?


காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் மதுவிலக்கு கொள்கை மிகக் கடுமையான சட்டங்களுடன் இன்னும் அமலில் உள்ளது. ஆனால், சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மதுபாட்டில் சப்ளை செய்யப்பட்டு சேல்ஸ் செய்யப்பட்டு வருகிறது.

குஜராத் மாநிலத்தில் பண்ணை வீட்டில் மது விருந்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 38 பெண்கள் உட்பட 81 பேரை போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளனர். இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை பண்ணை வீட்டில் இறக்கி ஆட்டம் போட்டவர்களுக்கு அதிகாரிகள் வைத்த டுவிஸ்ட் என்ன?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பண்ணை வீட்டில் மது விருந்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளனர். மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலத்தில் சட்ட விரோதமாக வெளிநாட்டு மதுபாட்டில்களை இறக்கி ஆட்டம் போட்டவர்கள் மீது அம்மாநில காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பண்ணை வீட்டு பார்ட்டியும்... படையோடு சிக்கிய சம்பவமும்... நடந்தது என்ன?

அமித்பச்சேரிவால் என்பவர் தனது மைத்துனர் ஆதர்ஷின் 25ஆம் ஆண்டு திருமண விழாவைக் கொண்டாட, அகமதாபாத் சிட்டி அவுட்டரில் உள்ள பண்ணை வீட்டில் பலே விருந்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். ரவி என்ற மருந்து வணிகருக்கு சொந்தமான அந்த பண்ணை வீட்டில் கிட்டதட்ட 30க்கும் மேற்பட்ட பெண்களுடன் ஆட்டம் பாட்டம் என கும்மாளம் அடித்து அலப்பறை செய்துள்ளனர்.

அதனால் பாதிக்கப்பட்ட அக்கம்பக்கத்தினர் யாரோ அகமதாபாத் போலீசாருக்கு ரகசிய தகவல் அளிக்க, சம்பந்தப்பட்ட பண்ணை வீட்டில், பெரும் போலீஸ் படையே சுற்றி வளைத்தது. காதை கிழிக்கும் சத்ததிற்கு நடுவே காக்கி சட்டையில் போலீசார் அடியெடுத்து வைக்க அங்கிருந்த 100க்கும் மேற்பட்டோர் தலைதெறிக்க ஓடினர். காரணம் திருமண அனிவர்சரி விழாவில் போதை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் மதுவிலக்கு கொள்கை மிகக் கடுமையான சட்டங்களுடன் இன்னும் அமலில் உள்ளது. ஆனால், சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மதுபாட்டில் சப்ளை செய்யப்பட்டு சேல்ஸ் செய்யப்பட்டு வருகிறது. அதேதான் இங்கும் நடந்துள்ளது. எந்தவித அனுமதியும் இல்லாமல், பண்ணை வீட்டில் மது விருந்து பார்ட்டி நடத்தி சட்டத்தை மீறியுள்ளனர். இதனால் விருந்தில் கலந்துகொண்ட 43 ஆண்கள் மற்றும் 38 பெண்கள் உட்பட 81 பேரை கொத்தாக கைது செய்தனர்.

வெளிநாட்டு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக ஆர்டர் செய்து ப்ளாக்கில் வாங்கி இவர்கள் மது அருந்தி அட்ராசிட்டி செய்திருப்பது விசாரணையில் உறுதியானது. இதனை அடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது மதுவிலக்குச் சட்டத்தின் 65(A)(A), 116(B), 66(1)(B) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் சனந்த் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள், ஹுக்காக்கள், கார்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

news18


 


Post a Comment

0 Comments