Ticker

6/recent/ticker-posts

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றவாளிகளின் ரூ.500 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல்…


இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு பின்னர் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள நபர்களின் சொத்துக்கள் கடந்த ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மட்டும், இவ்வாறு ஏறக்குறைய 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அண்மைக்காலமாக பாதாள உலகக் குழுவினரும் போதைப்பொருள் வர்த்தகர்களும் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்தியா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றவாளிகளை கைது செய்து நாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

lankatruth


 


Post a Comment

0 Comments