
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோர் நண்பர்களான பிறகு, சமூக வலைதளங்களில் AI வீடியோக்கள் ஒரு தனி கலாச்சாரமாகவே மாறிவிட்டன. குறிப்பாக மஸ்க்கிற்குச் சொந்தமான 'X' தளத்திலும் டிரம்பின் ட்ரூத் வலைதளத்திலும் இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அலப்பறைகள் கொஞ்ச நஞ்சமல்ல!
அந்த வகையில் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமா குறித்து டிரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்ட வீடியோ தற்போது உலகளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 2020 தேர்தல் முறைகேடுகள் குறித்த அந்த ஏஐ வீடியோவில், ஒபாமா மற்றும் மிஷெல் ஒபாமாவின் முகங்களை குரங்குகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
கருப்பினத்தவரை குரங்குகளுடன் ஒப்பிடுவது ஒரு மோசமான இனவெறி என்பதால், ஜனநாயகக் கட்சியினர் மட்டுமின்றி, அவரது சொந்த குடியரசுக் கட்சியினரும் டிரம்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பில் கிளிண்டன், ஜோ பைடன், கமலா ஹாரிஸ், ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்டோரை தாழ்வாக சித்திரிக்கும் அந்த வீடியோவில் டிரம்ப் தன்னை சிங்கம் போல் காட்டியுள்ளார்.
முதலில் இதனை 'வெறும் இணைய மீம்' என்று வெள்ளை மாளிகை நியாயப்படுத்திய நிலையில், கடும் எதிர்ப்புகள் காரணமாக அந்தப் பதிவு நீக்கப்பட்டது. வெள்ளை மாளிகை ஊழியர் ஒருவர் தவறுதலாக இதனைப் பதிவிட்டுவிட்டதாக டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அதற்காக தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, ஒபாமாவை கைது செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டும் டிரம்ப் சர்ச்சையில் சிக்கினார். மற்றவர்களை இழித்தும், தன்னை மிகவும் உயர்த்தியும் AI வீடியோக்களை டிரம்ப் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். தன்னை ஒரு மதத் தலைவராகவும் சூப்பர் ஹீரோவாகவும் காட்டும் பல AI படங்களை அதிகாரப்பூர்வமாகவே பகிர்ந்துள்ளார்.
டிரம்ப் போப் ஆண்டவர் உடையில் இருப்பது போன்றும், 'ஸ்டார் வார்ஸ்' படத்தின் ஜெடி (Jedi) வீரராக வாளுடன் இருப்பது போன்றும் படங்கள் வெளியிடப்பட்டன. மேலும் டிரம்ப் ஒரு போர் வீரனை போல் விமானத்தை ஓட்டிச் சென்று, தனக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது 'சாக்கடை நீரை' கொட்டுவது போன்ற ஒரு வீடியோவை கடந்த ஆண்டு பகிர்ந்திருந்தார்.
போரால் சிதறுண்டு போயிருக்கும் காசா பகுதியில் மிகப்பெரிய 'டிரம்ப் ஹோட்டல்' மற்றும் அவரது தங்கச் சிலை இருப்பது போன்ற கற்பனை வீடியோவையும் அவர் வெளியிட்டார். டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈரான் தலைவர்களைக் கிண்டல் செய்யும் விதமாகப் பல AI வீடியோக்களைப் பகிர்ந்தனர்.
குறிப்பாக, அலி கமேனி ஒரு பதுங்கு குழியில் ஒளிந்திருப்பது போன்றும், அவரை அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணைகள் துரத்துவது போன்றும் சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் வைரலாகின. இதற்கு பதிலடியாக, கமேனியின் அதிகாரப்பூர்வ இணையதளம் இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் யூதர்களை 'எலிகள்' போலச் சித்தரித்து, அவர்கள் ஈரானிய ஏவுகணைகளைக் கண்டு ஓடுவது போல் காட்டியிருந்தனர். இதுவும் ஒரு பெரிய சர்வதேசச் சர்ச்சையானது.
டிரம்பின் இந்தப் புதிய பாணி அரசியலை ஆய்வாளர்கள் 'Slopaganda' என்று அழைக்கிறார்கள். அதாவது, உயர்தரமான பிரச்சாரங்களுக்குப் பதிலாக, AI மூலம் உருவாக்கப்பட்ட தரம் குறைந்த 'மீம்' வீடியோக்களைப் பரப்பி மக்களைக் கவர்வதுதான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments