Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-29


குறள் 145:

எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி.

எளிதாய்ப் பிறர்மனையைத் தீண்டலாம் என்னும் கழிசடையைத் தீண்டும் பழி.

குறள் 146:

பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்.

பகைதீமை அச்சம் பழியென்றும் நீங்கா பிறன்மனை நாடுவோனை விட்டு.

குறள் 147:

அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான் பெண்மை நயவா தவன்.

பிறன்மனை நாடாத பண்பாளன் மட்டும் அறங்காக்கும் இல்லறத்தா னாம்.

குறள் 148:

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறனென்றோ ஆன்ற வொழுக்கு

பிறன்மனையை நாடாத சான்றாண்மை ஒன்றே அறமும் ஒழுக்கமு மாம்.

குறள் 149:

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறற்குரியாள் தோள்தோயா தார்.

கடல்சூழ் உலகத்தின் நன்மைகள் எல்லாம் பிறர்மனைத் தோள்சேரா தார்க்கு

(தொடரும்)

 


Post a Comment

0 Comments